சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சு உம்ராஹ் விசாக்களின் காலப் பகுதியை 14 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக சவூதி அரேபியாவின் அரப் நியுஸ் இன்று செய்தி வெளியிடுள்ளது.
தற்போது புனித மக்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமான மற்றும் புனித கஹ்பாவை சுற்றும் பகுதியின் விரிவாக்கல் வேலைத்திட்டம் காரணமாகவே இந்த புதிய விதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு சவூதி அரபியாவில் உள்ள உம்ராஹ் முகவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சவூதி தூதுவராலயங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்ட சுற்று நிருபத்தின் அடிப்படையில், இந்த புதிய விதி நாளை திங்கள் கிழமையில் இருந்து அமுலுக்கு வருகின்றது.
இந்த விதியின் அடிப்படையில், இனி வெளிநாடுகளில் இருந்து உம்ராஹ் செல்பவர்கள் இரு வாரங்களுக்கு மாத்திரமே உம்ராஹ் விசாவில் சவூதி அரேபிபியவுக்கு செல்லமுடியும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...