Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 09, 2013

பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகள் மட்டுமே நியமனம்:தமிழக அரசு உத்தரவு

அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டுமே நியமிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான உத்தரவை பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் டி.சபீதா பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் நியமனத்தில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

எனவே பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இனி ஆசிரியர்களாகவும் தலைமை ஆசிரியர்களாகவும் பெண்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். இதேபோன்று ஆண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்கள் மட்டுமே ஆசிரியர்களாகவும் தலைமை ஆசிரியர்களாகவும் பணியமர்த்தப்படுவர். அதேநேரத்தில் ஆண்- பெண் இருபாலரும் படிக்கும் பள்ளிகளில் மட்டும் ஆண்களும் பெண்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 3096 அரசு உயர்நிலைப்பள்ளிகளும் 2,595 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இதுதவிர
ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளைச் சேர்த்து மொத்தம் 2 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியை, ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 -தொகுப்பு ராஜா முகம்மது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...