Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 27, 2013

இந்தியாவை உளவு பார்த்த குற்றச்சாட்டு: அமெரிக்காவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி:இன்டர்நெட் வழியாக இந்தியாவை உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்காவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம், இன்டர்நெட்டில் இந்தியர்கள் பரிமாறிக் கொள்ளும் தகவல்களை அமெரிக்காவின் என்.ஐ.ஏ. உள்ளிட்ட உளவு நிறுவனங்கள் ரகசியமாக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளையும் அமெரிக்கா இன்டர்நெட் உதவியுடன் உளவு பார்த்துள்ளது. இந்நிலையில் இந்தியர்களின் தகவல்களை உளவு நிறுவனங்களுக்கு அளித்த அமெரிக்க நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அமெரிக்க அரசின் உளவு அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.தங்கள் இணையதளத்தில் பயனாளிகள் அளிக்கும் தகவல்களை ரகசியமாக வைத்திருப்போம் என்று ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் உறுதியளிக்கின்றன. ஆனால் அதற்கு மாறாக பல லட்சம் இந்தியர்களின் தகவல்கள் அமெரிக்க உளவு அமைப்புக்குச் சென்றுள்ளது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இது இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த மனு
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, “எங்கள் விசாரணை அதிகார வரம்பு உலகளாவியது அல்ல. அமெரிக்கர்களும், அமெரிக்க அரசும் நமது சட்ட வரம்புக்குள் வர மாட்டார்கள். எனவே இது விஷயத்தில் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.

source - thoothuonline.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...