டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தினால் காங்கிரஸ் கட்சிக்குத்தான் அது சாதகம் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு பாஜகவில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. பாஜகவில் ஜனநாயகக் கருத்துச் சுதந்திரம் கிடையாது. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டால் அது நிச்சயம் காங்கிரஸுக்கு சாதகமாக அமையும். குஜராத்மதக் கலவரங்களால் லோக்சபா தேர்தலில் 30 கோடி சிறுபான்மையினரின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவிருக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு
வருவதற்கு தாமே காரணம் என்று எதியூரப்பா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரது தயவால் அல்ல... மக்களின் வாக்குகளால், நம்பிக்கையால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது என்றார் அவர்.
வருவதற்கு தாமே காரணம் என்று எதியூரப்பா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரது தயவால் அல்ல... மக்களின் வாக்குகளால், நம்பிக்கையால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது என்றார் அவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...