புதுடெல்லி:ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான ஹாமித் அன்ஸாரி மீண்டும் துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
என்.டி.ஏ(தேசிய ஜனநாயக கூட்டணி) வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கை 252 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் அன்ஸாரி. பதிவான 736 வாக்குகளில் அன்ஸாரிக்கு 490 வாக்குகளும், ஜஸ்வந்த் சிங்கிற்கு 238 வாக்குகளும் கிடைத்துள்ளன.
உடல் சுகவீனம் காரணமாக சென்னையில் சிகிட்சைப் பெற்றுவரும் அமைச்சர் விலாஸ்ராவ் தேஸ்முக் உள்பட 47 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை. எட்டு வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.
75 வயதான ஹாமித் அன்ஸாரி தொடர்ச்சியாக 2-வது முறையாக துணை குடியரசு தலைவராக தேர்வுச் செய்யப்படும் 2-வது நபர் ஆவார். இதற்கு முன்பு எஸ்.ராதாகிருஷ்ணன் இந்த தகுதியை பெற்றுள்ளார். ஹாமித் அன்ஸாரியின் வாழ்க்கைக் குறிப்பு: பிறந்த ஊர்:கொல்கத்தா சொந்த ஊர்:உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் வகித்த பதவிகள்:1961-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்று வெளியுறவுத்துறையில் பணி. ஆஸ்திரேலியாவிற்கான இந்திய தூதர், ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கான இந்திய தூதர். ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்த பிரதிநிதியாக பணியாற்றியவர்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 2000-ம் ஆண்டு மே மாதம் முதல் 2002 மார்ச் வரை துணை வேந்தராகப் பணியாற்றினார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கவுரவ பேராசிரியராகவும்
பணியாற்றினார். தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். மேற்காசிய விவகாரங்களில் ஆர்வமுடைய அன்ஸாரி ஃபலஸ்தீன் உட்பட உட்பட பல்வேறு மேற்காசிய நாடுகளின் வெளியுறவு விவகாரங்கள் குறித்துப் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...