காஸ்ஸா:மஸ்ஜிதுல் அக்ஸா என்றழைக்கப்படும் பைத்துல் முகத்தஸை பாதுகாக்க கோரி காஸ்ஸாவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. ஃபலஸ்தீன் இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் இப்பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. பைத்துல் முக்கத்தஸின் தற்போதைய முற்றத்தை பூந்தோட்டமாக மாற்ற யூத சியோனிச அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள்
போராட்டம் நடத்த வீதிகளில் இறங்கினர்.
பல்வேறு மஸ்ஜிதுகளில் இருந்து புறப்பட்ட மக்கள் கூட்டம் ஜபலிய்யா சாலையில் நிரம்பி வழிந்தது. யூதர்களின் சதித்திட்டத்திற்கு எதிராகவும், யூத தலைவர்களுக்கு எதிராகவும் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாக்க முஸ்லிம்களை ஊக்கப்படுத்தும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன. யூதர்களின் சதித்திட்டங்கள் மற்றும் தாக்குதல்களில் இருந்து அக்ஸாவை பாதுகாக்க மக்கள் தயாராக உள்ளார்கள் என்பதை பேரணியில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் திரள் நிரூபிப்பதாக போராட்டத்திற்கு
தலைமை தாங்கிய முஹம்மது அபூ அஸ்கர் தெரிவித்தார்.
நன்றி:ஆசிய நண்பன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...