மின்வெட்டை கண்டித்தும், நெய்வேலி மின்சாரத்தை முழுவதையும் தமிழகத்திற்கு வழங்கக் கோரி சிதம்பரத்தில் செப்.4-ல் கடைஅடைப்பு நடத்துவது என அனைத்து வணிக, சமூக நல அமைப்புகள் முடிவு செய்துள்ளது.
அண்மைக் காலமாக நாளொன்றுக்கு 10 மணி நேரங்களுக்கு மேலாக மின்வெட்டு செய்யப்படுவதால் பொதுமக்கள், குறிப்பாக வணிகர்கள், சிறுதொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மின்வெட்டு குறித்து சிதம்பரம் நகர தொழில், வணிக, சமூக நல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில் கடும் மின்வெட்டை கண்டித்தும், நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்கக் கோரி சிதம்பரம் நகரில் கடைஅடைப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் வர்த்தக சங்க பொருளாளர் பெரி.முருகப்பன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...