Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 25, 2012

வடகிழக்கு மாநிலத்தவர்களை பீதியில் ஆழ்த்திய பிரச்சாரம்: ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்களுக்கு தடை !

புதுடெல்லி:வடகிழக்கு மாநிலத்து மக்களை பீதியில் ஆழ்த்தி அவர்கள் கூட்டமாக வெளியேறக் காரணமான வதந்தி செய்திகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு தடைச்செய்த 20 சதவீத இணையதளங்களும் ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்களுக்கு சொந்தமானவை என்று டைம்ஸ் ஆஃப் நாளிதழ் கூறுகிறது. துவக்கத்தில் சோஷியல் நெட்வர்கிங் இணையதளங்கள் மூலமாக பாகிஸ்தான் இந்தியாவில் பீதியை கிளப்பி கலவரத்தை தூண்டுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆனால், அஸ்ஸாமில் நடந்த கலவரத்தின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 அஸ்ஸாமில் சிறுபான்மை முஸ்லிம்கள் பழங்குடி போடோ இனத்தவர்களுக்கு எதிராக கலவரம் நடத்துவதாக அவதூறான செய்தியை கொந்தளிப்பை ஏற்படுத்தும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்கள் வெளியிட்டுள்ளன. சீன ஆக்கிரமிப்பை கண்டித்து திபெத்து மக்கள் தற்கொலைச் செய்த புகைப்படங்களையும், வீடியோக்களையும், ஏராளமான போஸ்டர்களையும் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய முஸ்லிம்கள் அஸ்ஸாமில் ஹிந்துக்கள் மீது நடத்துவதாக கீழே குறிப்பிட்டு ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்களில் வெளியிடப்பட்டிருந்தன. சுதந்திர தினத்தில் பாகிஸ்தான் சிந்துமாகாணத்தில் உள்ள ஹைதராபாத்தில் அந்நாட்டு சுதந்திர தினத்தன்று குடியேற்றிய காட்சியை, இந்தியாவில் உள்ள ஹைதராபாத் நகரத்தில் முஸ்லிம்கள் பாக். கொடியை ஏற்றியதாக அவதூறான செய்தி பரப்பப்பட்டது.

கலவரத்தின் திரைமறைவில் வடகிழக்கு மாநிலத்து மக்களிடம் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களை கவர ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் தீவிரமாக முயன்றன. இதில் சில அமைப்புகள் போடோ வன்முறையாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர். பிற மாநிலங்களில் இருந்து கூட்டமாக வெளியேறிய வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் உணவும் மற்றும் சேவைகளை வழங்க ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்துத்துவா
தீவிரவாத அமைப்புகள் களமிறங்கின.

ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி) இந்தியாவின் 20 நகரங்களில் 24 மணிநேர ஹெல்ப் லைன்களை ஏற்பாடுச் செய்தது. மேலும் அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான பஜ்ரங்தள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...