Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 26, 2012

மாவட்டத்தில் மின்வெட்டு இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

கடலூர், : அறிவிக்கப்படாத மின் வெட்டால் கடலூர் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தமிழக மக்கள் இருண்ட காலத்திற்கு தள்ளப்பட்ட னர். கடும் இன்னல்களை சந்தித்தனர். அப்போது மக்களை சமாதானப்படுத்திய அரசு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நிலைமை சீராகும் என அறிவித்தது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக கடந்த ஒரு வார மாக நிலவி வரும் வரலாறு காணாத மின்வெட்டால் மக்கள் விழி பிதுங்கிபோய் உள்ளனர்.

இரவு 6 மணி முதல் 7வரை, 10 மணி முதல் 11 வரை, 12 முதல் 1 மணி வரை, 2 மணி முதல் 3 மணி வரை, காலை 6 மணி முதல் 9 மணி. மதியம் 12.30 மணி முதல் 4 மணி முதல் இப்படி அடுக்கடுக்கான மின்வெட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் திகைத்து போய் உள்ளனர். கடலூர் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகளுக்கும் கடலூர் மாவட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள 500 க்கும் மேற்பட்ட நீர்தேக்கத்தொட்டி களுக்கும் மின்வெட்டால் நீரேற்ற முடியவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகரப்பகுதியில் தான் இப்படி என்றால் கிராம பகுதிகளிலோ குறுவை சாகுபடிக்கு போதுமான தண்ணீர் விடமுடியாமல் விவசாயிகளும் வேதனை அடைந்துள்ளனர். சாலைகள் தோறும் பரவி கிடக்கிற ஜெராக்ஸ் கடை, கம்ப்யூட்டர் சென்டர்கள், மாவு மில்கள், சிறிய வணிக நிறுவனங்கள், மற்றும் மின்சாரத்தை மட்டுமே நம்பியுள்ள பல ஆயிரம் சிறு மற்றும் குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

 கடலூர் துறை முகப்பகுதிகளில் ஐஸ் பார்கள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. உழவர் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரவீந்திரன் கூறியதாவது: மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை. கல்பாக்கம் மற்றும் தூத்துக்குடி அனல்மின்நிலையங்களில் தொழில்நுட்ப கோளாறு, காற்று வீசாததால் காற்றாலை மின்சாரம் தயாரிப்பு பாதிப்பு, இப்படி பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. முன் எச்சரிக்கையோடு இவற்றை ஊகித்து திட்டங்கள் தயாரித்திருக்க வேண்டும். மின்சாரத்திற்கு தனியாரையே நம்பியிருக்கும் அரசிடம் உரிய
மின்திட்டங்கள் கையில் இல்லை.

மின்வெட்டால் பெரும் இன்னலுக்கு ஆளாகியிருக்கும் மக்களை சமாளித்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு வேடிக்கை பார்க்காமல் உடனடியாக மின்பற்றாக்குறையை சரி செய்ய உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தி மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் பெற்று நிலைமையை சமாளிக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...