Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 26, 2012

நிலவில் முதன் முதலில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்!

நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் காலமானார்.இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி அறுவை சிகிட்சை நடந்தது. இதன் பிறகும் அவருக்கு உடல்நலன் சீரடையவில்லை. 1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் அப்போல்லோ-11 விண்கலத்தில் சென்று சந்திரனில் கால்பதித்தார். நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், மைக்கில் காலின்ஸ் ஆகியோர் கொண்ட குழு அப்போல்லோ-11 இல் சந்திரனுக்கு சென்று. மனித குல வரலாற்றில் இது பெரிய சாதனையாக கருதப்பட்டது.

 1930-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஒஹியோ மாகாணத்தில் உள்ள கோனெட்டா என்ற சிறிய நகரில் பிறந்த ஆம்ஸ்ட்ராங் புருடியூ பல்கலைகழக்த்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த பின்னர் தன்னுடைய 30-ம் வயதி்ல் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விமானியாக பணியில் சேர்ந்தார் நீல் ஆம்ஸ்ட்ராங். பின்னர் நாஸாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஆம்ஸ்ட்ராங், நாஸா மேற்கொண்ட நிலவு குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் சந்திரனுக்கு அனுப்பட்ட அப்போல்லோ-11 விண்கலத்தில் பயணித்தார். சந்திரனுக்கு சென்று திரும்பிய பிறகு நாஸா விண்வெளி ஆராய்ச்‌சி
மையத்தில் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பபிரிவில் ஆலோசகராக பணிபுரிந்தார். ஆம்ஸ்ட்ராங் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் பேராசிரியராகவும் ஆம்ஸ்ட்ராங் பணியாற்றினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...