Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 13, 2012

ஜெர்மன் ஆயுதங்களுடன் தாலிபான் போராளிகள்!

காபூல்:ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தலைமையிலான ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் தாலிபான் போராளிகள் ஜெர்மன் தயாரிப்பு ஆயுதங்களை உபயோகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் தாலிபான் போராளிகளிடமிருந்து ஆப்கான் ராணுவத்தினர் கைப்பற்றிய சில ஆயுதங்கள் ஜெர்மனில் தயாரிக்கப்பட்டவை என ஜெர்மன் நாளிதழான எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

 இயந்திர துப்பாக்கி, பிஸ்டல்ஸ், மோர்ட்டார், வெடிப்பொருட்கள் ஆகியன தாலிபான் வசமிருக்கும் ஜெர்மன் ஆயுதங்களாகும். 2006-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பியிருந்தது. ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு விற்பனைச் செய்த 4500க்கும் மேற்பட்ட ஜெர்மன் தயாரிப்பு Walther துப்பாக்கிகள் காணாமல் போனதாக எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூறுகிறது. 2004-க்கும், 2008-க்கும் இடையே அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலமாக ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்பட்ட ஆயுதங்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மாயமானது. ஜெர்மன் ஆயுதங்கள் பாகிஸ்தானின் கறுப்பு சந்தையில் அதிகமாக கிடைப்பது தாலிபான் போராளிகளுக்கு உதவுவதாக அப்பத்திரிகை கூறுகிறது.

 ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு ராணுவ வீரர்களில் இருந்து தாலிபானுக்கு அணி மாறும் நான்கில் ஒருவரும் ஆயுதங்களை அரசுக்கு திரும்ப அளிப்பதில்லை என்று
ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த வாரம் ஹெல்மந்த் மாகாணத்தில் 11 போலீஸ் அதிகாரிகள் தாலிபான்கள் அணியில் சேர்ந்தனர். 11 ஏ.கே-47 துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள், மோட்டார் சைக்கிள்களையும் போலீஸ் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
செய்தி:தூதுஆன்லைன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...