Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 28, 2012

சிதம்பரம் நகராட்சியில் கழிவுநீர் !!

சிதம்பரம், : சிதம்பரம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் நிர்மலா சுந்தர், தலைமை தாங்கினார். ஆணையர் (பொறுப்பு) செல்வராஜ், பொறியாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு, நகராட்சி தலைவர், ஆணையர் பதில் அளித்தனர். அதன்விவரம் வருமாறு: செல்வராஜ் (மூமுக) எனது 33வது வார்டு இந்திரா நகரில் குடிநீர் மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதே இல்லை. அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர். லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை.. அப்பகுதியில் குடிநீர் வருகிறதோ இல்லையோ ஆனால் கழிவுநீர் மட்டும் தாராளமாக ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தி ஆகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள பாலமானில் நகரிலுள்ள கழிவுநீர் கலப்பதால் அதனை சுற்றியுள்ள நேரு நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

 திருவரசு (விடுதலைசிறுத்தை) அம்பேத்கர் திருவுருவ சிலையை நகராட்சி வளாகத்தில் நிறுவ வேண்டும். முகமதுஜியாவுதீன் (காங்) சமீபத்தில் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் சிதம்பரம் கீழவீதியில் நடைபாதைகள்ஆக்கிரமிக் கப்பட்டுள்ளன. ஆகையால் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். சிதம்பரம் நகரில் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜேம்ஸ் விஜயராகவன்(திமுக) - சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது. தினந்தோறும் பேருந்துகளில் வரும் மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

அருகில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வழியாக பள்ளிக்கு சாலை அமைத்து தர வேண்டும். அப்புசந்திரசேகர் (திமுக) - எனது வார்டு திருபாட்டன் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேஸ்வரி (திமுக) - எனது வார்டில் குடிநீர் கலங்கலாக வருகிறது. தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும். ரமேஷ்(தமிழக வாழ்வுரிமை கட்சி) - நகராட்சி நிர்வாகம் மக்களை தேடி போக வேண்டும். நகராட்சி தலைவர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வார்டு வாரியாக சென்று மக்கள் குறைகளை கேட்டு சரிசெய்ய வேண்டும். லால்கான் தெருவில் உள்ள அரசு மதுபான கடையால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. அதை மாற்ற வேண்டும்.

 கவுன்சிலர்களின் குறைகளுக்கு பதிலளித்து நகர்மன்றத்தலைவர் நிர்மலாசுந்தர் பேசுகையில், ஏற்கனவே வார்டுகளில் நேரடியாக சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்து சரிசெய்து வருகிறோம். மேலும் உறுப்பினர்கள் கூறிய கோரிக்கைகள் அனைத்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...