கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரும் ஏரியான வீராணம் ஏரி முன்னெப்போதும் இல்லாத அளவில் வறண்டு கிடக்கிறது. இதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி சென்னைவாசிகளும் கலக்க மடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் வீராணம், பெருமாள், வாலாஜா, வெலிங்டன், சேத்தியாத்தோப்பு, மற்றும் நாரை ஏரி என 7 ஏரிகள் இருந்தபோதிலும் மிகப்பெரிய கொள்ளளவு கொண்டது வீராணம் ஏரி.
இந்த ஏரியின் மொத்தப் பரப்பு கீழ்ப்புறம் 17 கி.மீ. மேல்புறம் 8 கி.மீ உள்ளது. இதன் நீர் கொள்ளளவு 1.44 டிஎம்சியாக இருந்தது. தற்போது 0.96 டிஎம்சி அளவு கொள்ளளவு உடையதாக மாறிவிட்டது.
வீராணம் ஏரியிலிருந்து 46 ஆயிரம் ஏக்கரில் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இது மட்டுமில்லாமல் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் இந்த ஏரியிலிருந்து கடந்த 2004-ம் ஆண்டு முதல் சென்னைக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு தென்சென்னை பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கியதும் அவ்வப்போதும் பெய்யும் மழைகளாலும், மேட்டூர் அணை திறக்கப்படும்போதும் வீராணத்துக்கு நீர்வரத்து இருக்கும்.÷இந்த ஏரிக்கு முக்கிய நீர்வரத்து காவிரிநீர் மற்றும் அரியலூர் மாவட்டத்திலுள்ள சோழகங்கை எனும் பொன்னேரியின் உபரி நீராகும். இந்த ஆண்டு பருவமழை தவறியதாலும், மேட்டூர் திறக்கப்படாததாலும் வீராணம் ஏரி வறண்டு காட்சியளிக்கிறது. வீராணத்தை நம்பி விவசாயம் செய்துவரும் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாது என உறுதியாகிவிட்ட நிலையில் சம்பா பயிரிடலாம் என்றால் அதற்கும் வாய்ப்பு இல்லை என்கின்றனர்.
செப்டம்பர் 17-ல் மேட்டூர் அணையின் தண்ணீர் திறந்து, அது எப்போது வீராணத்தை வந்தடைவது? அதன்பின் பாசன வாய்க்கால் மூலம் எப்போது விளைநிலங்களை சென்றடைவது? இதுபோன்று எண்ணற்ற கேள்விகளை எழுப்புகின்றனர்
விவசாயிகள். அரசு முதலில் வீராணத்துக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த ஏரியைத் தூர்வாரி நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும். இதன்மூலம் நீரின் கொள்ளளவு உயர்வதோடு, ஆண்டுதோறும் ஏரியில் நீர் தங்கி இருக்கும். பருவமழை பொய்த்தாலும் பாசனத்துக்கு வீராணம் கைக்கொடுக்கும் என்கின்றனர் கடலூர் மாவட்ட விவசாயிகள்.
-Dinamani

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...