Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 25, 2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவாக தொடங்க வேண்டும் இ.யூ.முஸ்லிம் லீக் தீர்மானம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவாக தொடங்க வேண்டும் என்ற அரசின் முடிவை வரவேற்கிறோம். மின்தட்டுப்பாட்டை போக்க அணுமின்சாரம் தேவை என்பதை உணர்ந்து எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை கைவிட்டு தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது 65வது ஆண்டு விழாவையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த வெற்றி விழா மாநாட்டினையும் எழும்பூரில் நேற்று நடாத்தியது. இவ்விழாவில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில பொருளாளர் எஸ்.ஏ.ஷாஜகான், துணை தலைவர் வடக்கு கோட்டையார் வி.எம்.சைய்யது அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவ்விழாவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவாக தொடங்க வேண்டும் என்ற அரசின் முடிவை வரவேற்கிறோம். மின்தட்டுப்பாட்டை போக்க அணுமின்சாரம் தேவை என்பதை உணர்ந்து எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை கைவிட்டு தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முஸ்லிம் லீக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 மேலும்,‘கட்சியை அங்கீகரித்து ஏணி சின்னம் ஒதுக்க பாடுபட்ட மத்திய மந்திரி இ.அகமது, காதர் மொகிதீன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் முஸ்லிம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கவும் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் 5% உயர்த்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கேரளாவில் நடைபெறவுள்ள முஸ்லிம் லீக் மாநாட்டில் தமிழகத்தில் 10 ஆயிரம் இளைஞர்களை பங்கேற்க செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மே மாதம் 1ம்தேதி சென்னையில் தொழிலாளர் உரிமை பேரணி மற்றும் மாநாடு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...