Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 16, 2012

ஈரான் உறவை கைவிடாவிட்டால் பொருளாதாரத் தடை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

நியூயார்க்: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கக் கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானை தவிர்த்து சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக ஜூன் மாதம் இறுதியில் முடிவெடுக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்திருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் ஈரானை கை கழுவுவது தொடர்பாக ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்க இந்தியா மறுக்கும்நிலையில் பொருளாதாரத் தடை விதிக்க நேரிடலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இத்தகைய எச்சரிக்கைகளுக்குப் பின்னணியில் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் ஆதரவு குழுவினரே காரணம் என்று அமெரிக்காவுக்காக இந்திய தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...