சென்னை, மார்ச் 25: ஹஜ் பயணம் செல்பவர்கள் வசதிக்காக, சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் ஏற்பாட்டில், சிறப்பு பாஸ்போர்ட் முகாம் சென்னையில் நேற்று நடந்தது.
தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஹஜ் பயணம் செல்பவர்களின் வசதிக்காக, ஒரே இடத்தில் பாஸ்போர்ட் எடுப்பதற்கு வசதியாக, சென்னையில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை, சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் செய்திருந்தார். இந்த முகாமை தொடங்கிவைத்து, பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் பேசும்போது கூறியதாவது. ஹஜ் பயணம் செல்பவர்களின் வசதிக்காக, இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமை பாஸ்போர்ட் அலுவலகம் விடுமுறை என்றபோதிலும், ஹஜ் புனித பயணம் செல்பவர்களின் வசதிக்காக, இன்று இந்த முகாம் நடத்தப்படுகிறது. ஹஜ் பயணம் செல்வோர் அதிக ஆர்வத்துடன் வந்துள்ளதால், 31-ந் தேதி(சனிக்கிழமை)யும் இதுபோன்று சிறப்பு முகாம் நடைபெறும். இது அல்லாமல், சாலிகிராமம் பாஸ்போர்ட் அலுவலகத்தில், 31-ந் தேதி வரையில், தினசரி மிகக்குறைந்த அளவில் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்ப மனுக்கள் பெறவும் ஏறுபாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செந்தில் பாண்டியன் கூறினார். நன்றி: தினதந்தி

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...