Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 01, 2012

சிரியாவில் மனித உரிமை மீறல்களை தடுக்க சர்வதேச சமூகம் தயாராகவேண்டும் – கத்தர் கோரிக்கை!

ஜெனீவா:சிரியாவில் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தவும், அங்குள்ள குடிமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் சர்வதேச சமூகம் விழிப்புணர்வுடன் செயலாற்ற முன்வருமாறு கத்தர் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவாவில் நேற்று நடந்த மனித உரிமை கவுன்சிலின் கூட்டத்தில் விவாதத்தில் பங்கேற்ற கத்தர் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டாக்டர்.காலித் பின் முஹம்மது அல் அதிய்யா இக்கோரிக்கையை முன்வைத்தார்.

சிரியாவில் பகிரங்கமாக மனித உரிமை மீறல்கள் நடப்பதை சுட்டிக்காட்டுவதே இந்த மனித உரிமை கவுன்சில் கூட்டம் என்று அவர் சுட்டிக்காட்டினார். சிரியாவில் இரத்தக் களரியை முடிவுக்கு கொண்டுவரவும், அங்குள்ள மக்களுக்கு ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தவும் துவக்கம் முதலே கத்தர் சாத்தியமான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது என்பது சர்வதேச சமூகத்திற்கு தெரிந்த விஷயமாகும்.
கத்தர் இளவரசரும், பிரதமரும் சிரியாவுக்கு சென்று இவ்விவகாரம் குறித்து சிரியா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமைதி மற்றும் விவேகத்தின் சப்தத்தை கேட்பதை விட குண்டுகளின் சப்தத்தை கேட்பதுதான் சிரியா அரசுக்கு விருப்பமாகும்.

சிரியா அரசுக்கு எதிராக நடைபெறும் மனிதஉரிமை மீறல்கள் மிகவும் தீவிரமானது. வயோதிகரும், குழந்தைகளும், பெண்களும் உள்ளிட்ட நிரபராதிகள் கொல்லப்படுகின்றனர். வாழ்க்கையின் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. மோசடிக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளாகும் குடிமக்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்படுகின்றார்கள். ஏராளமான சிரியா மக்கள் அண்டை நாடுகளில் அபயம் தேடியுள்ளனர்.

இவையெல்லாம் சர்வதேச மனித உரிமை சட்டங்களையும், மனித நேய சட்டங்களையும் தீர்மானங்களையும் வெளிப்படையாக மீறிய செயலாகும். மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் சிரியாவில் நடந்தேறுகின்றன. அரபு லீக்கின் தீர்மானங்களையும், ஐ.நா பொதுச்சபையின் தீர்மானங்களையும் சிரியா அரசு நிராகரித்துவிட்டது.

சிவிலியன்களையும், ஊடகவியலாலர்களையும் சிரியா அரசு கொடூரமாக கொலைச் செய்கிறது. அரபு லீக்கின் தீர்மானங்களை அமுல்படுத்தவும், குடிமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்குமான வழிகளை திறக்க சிரியா அரசு தயாராகவேண்டும் என்று டாக்டர்அல் அதிய்யா வலியுறுத்தினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...