சென்னை: கலை, அறிவியல் படிப்புகளை முடித்து, வேலை வாய்ப்பு கிடைக்காத, 60% மாணவர்களுக்கு, உரிய வேலை வாய்ப்புக்கான புதிய திட்டங்களை வகுத்து, அது தொடர்பான அறிக்கையை முதல்வரிடம் விரைவில் வழங்குவேன்.
இவ்வாறு கூறியிருப்பவர், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் புதிய துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன்.
முந்தைய ஆட்சியில், உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக ராமசாமி இருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இவரது பதவிக் காலம் முடிந்தது. இதையடுத்து, நெல்லை மனோன்மணியம் பல்கலை முன்னாள் துணைவேந்தரான சிந்தியா பாண்டியனை, உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக நியமித்து, கவர்னர் உத்தரவிட்டார்.
கல்வித்தரம் உயர...
சென்னை, காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்றத்தில், துணைத் தலைவர் பதவியை ஏற்ற பின், சிந்தியா பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: உயர் கல்வித் துறையில் ஏராளமான பணிகள் நடக்கின்றன. இன்னும், அதிகமான பணிகள் செய்ய வேண்டியுள்ளது. 18 - 23 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், உயர்கல்வி கற்பதை அதிகரிக்க வேண்டும் என, முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதற்கு, கல்லூரிகள் மற்றும் பல்கலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும். இதை நிறைவேற்ற, உரிய திட்டங்கள் தீட்டப்படும்.
சவாலான திட்டம்: கலை, அறிவியல் கல்லூரிகளில் பட்டப் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களில், 60 சதவீத மாணவர்களுக்கு, சரியான வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இவர்களுக்குரிய வேலை கிடைக்கவும், படிப்புக்கேற்ற வேலை கிடைக்க உரிய பயிற்சியை அளிக்கவும், புதிய திட்டங்களை தீட்டி, அது தொடர்பான அறிக்கையை முதல்வரிடம் வழங்குவேன். இத்திட்டம், எனக்கு ஒரு சவாலாக இருக்கும்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் படிப்பவர்கள், வெளிநாடுகளில் சென்று ஒரு செமஸ்டர் படிக்கவும் வழிவகை செய்யப்படும். இதன் மூலம், பல்வேறு நாடுகளின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற திட்டங்கள் வெளிநாடுகளில் இருக்கின்றன. இதை, தமிழக மாணவர்களுக்கும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சிந்தியா பாண்டியன் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...