Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 10, 2012

ஆன்லைன் மூலம் ரேஷன் அட்டை புதுப்பிக்கும் வசதி! மக்கள் வரவேற்பு

சென்னை: தமிழக அரசின் பொது விநியோகத் திட்டதின் கீழ் வழங்கப்படும் குடும்ப (ரேஷன்) அட்டைகளை நிமிட நேரத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ள அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஆன்லைன் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கார்டுகள், ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன ஆனால். இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுவதால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளை புதுப்பித்து இந்த 2012 ஆம் ஆண்டு இறுதி வரை உபயோகப்படுத்தி கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் சென்று குடுமப அட்டையை கொடுத்து 2012ம் ஆண்டுக்கான இணைப்புத்தாளை பொருத்தி, கடையில் கையொப்பம் மற்றும் ‘சீல்’ பெற வேண்டும். அப்போதுதான் குடும்பஅட்டைகள் செல்லுபடியாகும் என்று அரசு அறிவித்தது.

புதுப்பித்தலுக்கு முதலில் ஜனவரி 31, 2012 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் புதுபித்தல் நிறைவடையாததை தொடர்ந்து அந்த காலக்கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது மார்ச் 31, 2012 வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில். பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் பொது விநியோகத் துறை சார்பில் www.consumer.tn.gov.in என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் ‘கார்டு புதுப்பித்தல் 2012’ என்ற பகுதிக்கு சென்று ரேஷன் கார்டின் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு அட்டையின் நிறம், குடும்ப உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கப்பட வேண்டியவர், சமையல் எரிவாயு விவரம் போன்ற தகவல்களோடு, தொலைபேசி எண்களையும் இணைய தளத்தில் பூர்த்தி பூர்த்தி செய்ய வேண்டும்.
அதன்பின்னர், உங்கள் கருத்துக்கள் என்ற கேள்வி வரும். கருத்துக்கள் இருந்தால் எழுதவும் இல்லையெனில், ‘இல்லை’ என்று எழுதி, அதை சேமிக்கவும் சேமித்த அடுத்த சில வினாடிகளிலேயே நமது குடும்ப அட்டை புதுப்பிக்கப்பட்டு, துணை ஆணையர் கையெழுத்துடன் இணையதளத்தில் ரசீது வருகிறது. இந்த ரசீதை அவரவர் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைக்கு சென்று, ஆன்லைன் பதிவு விவரங்களை காண்பித்து அட்டையில் கையெழுத்து மற்றும் சீல் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தங்கள் குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள நேரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறை மூலம் ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு ரசீதும் கிடைத்துவிடுவதால் மக்கள் இந்த முறையை பெரிதும் வரவேற்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...