Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 01, 2012

பாப்ரி மஸ்ஜித்:அகழ்வாராய்ச்சித்துறை அறிக்கையை வெளியிட சி.ஐ.சி உத்தரவு!

புதுடெல்லி:அயோத்தியில் பாபர் மசூதி உரிமையியல் வழக்கில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி பற்றிய அறிக்கையை வெளியிட வேண்டும் என்று இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்புக்கு (ஏ.எஸ்.ஐ.) மத்திய தகவல் உரிமை கமிஷன்(சி.ஐ.சி) உத்தரவிட்டுள்ளது.

எனினும், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு, உயர் நீதிமன்றத்தின் தடை இருக்கும் பட்சத்தில், அந்த உத்தரவின் நகலை மனுதாரரான சுபாஷ் அகர்வாலுக்கு அளிக்க வேண்டும் என்று தலைமைத் தகவல் கமிஷனர் சத்யானந்த மிஸ்ரா கூறியுள்ளார்.

அலாகாபாத் நீதிமன்ற உத்தரவுப்படி, அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையின் நகலைக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி ஏ.எஸ்.ஐ.க்கு சுபாஷ் அகர்வால் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இது உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு மட்டுமான அறிக்கை என்று கூறி, அதை அளிப்பதற்கு ஏ.எஸ்.ஐ. மறுத்துவிட்டது.

இந்த விவகாரம் ட்ரான்ஸ்ஃபரன்ஸி தீர்ப்பாயத்தில் கொண்டு செல்லப்பட்டபோதும் அகழ்வாராய்ச்சித்துறை தனது முடிவில் உறுதியாக இருந்தது.இதனை தொடர்ந்து அகர்வால் தகவல் உரிமை கமிஷனை நாடினார். அறிக்கையை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தால், அந்த உத்தரவின் நகலை தமக்கு வழங்க வேண்டும் என்று அகர்வால் தகவல் உரிமை கமிஷனிடம் தெரிவித்தார். இதையடுத்து மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...