Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 06, 2012

மாணவர்களை பிரம்பால் அடிக்கக் கூடாது: ஆசிரியர்களுக்கு குழந்தைகள் உரிமை கமிஷன் கட்டுப்பாடு

மத்திய அரசு அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனின் 5-வது நிறுவன தின கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பள்ளிக் குழந்தைகளுக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்து நாடு தழுவிய அளவில் நடந்த கருத்து கணிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

7 மாநிலங்களில் 6,632 மாணவர்களிடம் கேட்கப்பட்ட கருத்து கணிப்பில் பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் மனரீதியாக அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவித்து இருந்தனர். இதையடுத்து ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதித்து வழிகாட்டி அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி பள்ளியில் குழந்தைகளை பிரம்பால் அடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. பிரம் படி தண்டனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளிகள் தோறும் சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும்.

இந்த குழு பிரம்படி தண்டனை குறித்த புகாரை விசாரிப்பதுடன் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை, மனரீதியான துன்புறுத்தல் ஆகிய புகார்களை 48 மணி நேரத்துக்குள் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் மாணவர்களை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ தண்டிக்கும் எத்தகைய நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டோம் என்று ஆசிரியர்கள் எழுத்து மூலம் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்துள்ளது. பிரம்படி தண்டனை கொடுக்க கூடாது என்பதை பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான நிபந்தனை களில் ஒன்றாக ஆக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...