Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 10, 2012

இந்திய சுற்றுலா துறையில் 2.5 கோடி பேருக்கு வேலை

புதுடில்லி :

"வரும் 2016ம் ஆண்டுக்குள் சுற்றுலாத்துறை 12 சதவீத வளர்ச்சியை எட்டி விட்டால், கூடுதலாக, இரண்டரை கோடி பணியிடங்களை உருவாக்கி விட முடியும்' என மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் தெரிவித்தார். மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் பேசியதாவது: இந்தியா ஆற்றல் மிக்க சுற்றுலாத்துறையை கொண்டுள்ளது. 

இத்துறை வரும் 2016ம் ஆண்டுக்குள், 12 சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டி விட்டால், இந்த துறை 2016ம் ஆண்டுக்குள் இரண்டரை கோடி பணியிடங்களை உருவாக்கி விடமுடியும். இந்த இலக்கை எட்ட, வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கான சுற்றுலா போக்குவரத்தை அதிகரிக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நாட்டில் 2010ம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை, 11.8 சதவீதமாக வளர்ந்துள்ளது. கடந்தாண்டு, இந்தியாவுக்கு வெளிநாடு சுற்றுலா பயணிகளாக 60 லட்சம் பேர் வந்துள்ளனர்.இந்தாண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 70 லட்சமாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சுபோத்காந்த் சகாய் பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...