Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 27, 2012

சிதம்பரம் மருத்துவமனைக்கு ரூ.3 கோடியில் புதிய கட்டடம்: கட்டுமான பணி தீவிரம்

சிதம்பரம் :சிதம்பரம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் வகையில் பிரமாண்ட முகப்பு தோற்றத்துடன் 3 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு அடுத்த அந்தஸ்து பெரிய மருத்துவமனையாக சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது.

    சிதம்பரத்தைச் சுற்றியுள்ள 150க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இங்கு எக்ஸ்ரே, ரத்த வங்கி, மகப்பேறு, தோல் சிகிச்சை, பல் சிகிச்சை, கண் சிகிச்சை, நரம்பியல், எலும்பு முறிவு, ஓமியோபதி, சித்தா என தனித்தனி பிரிவுகள் உள்ளன. எந்த நேரத்திலும் ஆபரேஷன் செய்யும் வகையில் அறுவை அரங்கம் உள்ளது. தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகப்பேறு மற்றும் பல்வேறு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய் செலவில் 100 படுக்கை வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டடம் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு கட்டி திறக்கப்பட்டது. மேலும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் 60 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்டது. இருந்தும் அரசு மருத்துவமனையில் முகப்பு கட்டடம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் புதிய கட்டடம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் சிதம்பரம் மருத்துவமனையில் பழைமையான கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட
3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன.

      புதிய கட்டடத்தின் கீழ் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கம், வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, எக்ஸ்ரே, ஸ்கேன், அவசர சிகிச்சை ஆகியனவும், முதல் தளத்தில் நோயாளிகள் படுக்கை அறைகளும் கட்டப்படுகிறது. பழைய கட்டடம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பிரம்மாண்டமான முகப்பு தோற்றத்துடன் புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மருத்துவமனையை விரைவில் திறக்க வேண்டும் என்பதால் உயரதிகாரிகள் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தியதையடுத்து கடந்த ஒரு மாதமாக தீவிரமாக நடந்து வருகிறது.
-DN

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...