Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 18, 2012

இஸ்லாமாஃபோபியா:ஐரோப்பாவின் அறியாமை – வாடிகன் கர்டினால்!

வாடிகன் சிட்டி:இஸ்லாத்தை குறித்த ஐரோப்பாவின் அச்சத்திற்கு அடிப்படை அறியாமையே என்று வாடிகனின் மத விவாத கவுன்சில் தலைவர் கர்டினால் ஜீன் லூயி டவ்ரான் கூறியுள்ளார். அல்ஜஸீரா தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் இக்கருத்தை கூறினார்.

கர்டினால் ஜீன் லூயி டவ்ரான் கூறியது: நாகரீகங்கள் இடையேயான மோதலை தீர்க்க முடிந்தபோதிலும் அறியாமையின் மோதல் தொடரத்தான் செய்கிறது. வலதுசாரி சிந்தனையாளர்களிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள், அவர்களில் ஒருவர்கூட வாழ்க்கையில் திருக்குர்ஆனை திறந்து பார்க்கவோ, ஒரு முஸ்லிமை நேரடியாக சந்தித்துப் பேசியிருக்கவோ மாட்டார்கள். இவர்களை அதனை குறித்து புரியவைப்பது அவ்வளவு எளிதானது அல்ல.
மேற்காசியாவில் சில கல்வி நிலையங்களின் பாடப் புத்தகங்களில் கிறிஸ்தவர்களை குறித்து நிராகரிப்பாளர்கள் என்று கூறப்பட்டுள்ளது என்று கூறிய கர்டினால் அரபு வசந்தம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், கண்ணியத்தையும், சுதந்திரத்தையும், வேலையையும் கோரி இளைஞர்கள் போராட முன்வந்தது வரவேற்கத்தக்கது என்று கர்டினால் கூறினார்.

வசந்தம் குளிர்ந்து போகக் கூடாது என்றும், அது சூடாக மாறட்டும் என்று கூறினார்.

முதன் முறையாக வாடிகனின் பிரதிநிதி ஒருவர் அரபுலகத்தை குறித்து சேனல் மூலமாக தனது கருத்தை பதிவுச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை அல்ஜஸீரா கர்டினாலின் நேர்முகத்தை ஒளிபரப்புகிறது. 130 நாடுகளில் இந்த நேர்முகத்தை காணலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...