Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 10, 2012

தமிழக அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம்-நாளை ஜெ தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழக அரசின் புதிய காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா நிறுத்தினார். அதற்குப் பதிலாக விரிவான இன்னொரு காப்பீட்டுத் திட்டம் அமலாக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி 1 கோடியே 34 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை நாளை அவர் துவக்கி வைக்கிறார். இந்த காப்பீட்டுத் திட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பயன் பெறுவர். 1,016 சிகிச்சைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் 4 வருடங்களுக்கு ரூ.4 லட்சம் வரை வழங்க இந்த திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு, "முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழா நாளை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார். நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து 5 நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவீனங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் அடங்கும்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைப் போலவே தமிழகம் முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இந்த காப்பீட்டுத் திட்டம் செல்லும். இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மற்ற விவரங்களை அறிவதற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இதற்கென தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லாத 24 மணி நேர தொலைபேசி சேவை எண்ணான 18004253993 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களை www.cmchistn.com என்ற இணையத்தளத்தில் அறியலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...