Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 23, 2012

தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை

நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை மக்கள் தொகை கணக்கெப்பு துறை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் முதல்கட்டமாக கடலோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு இருப்பிட அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. மொத்தம் 829 கடலோர கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 11.7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 லட்சம் பேர் உள்ளனர். இப்போது அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டையில் பெயர், பாலினம், தாய்-தந்தை பெயர், பிறந்த தேதி, தாலுகா, மாவட்டம்,

அடையாள அட்டை எண் ஆகிய விபரங்கள் இடம் பெற்று இருக்கும். உறுப்பினர் பெயரும், தாய், தந்தை பெயரும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். மற்ற விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். ஸ்மார்ட் கார்டு போன்ற இந்த கார்ட்டில் உறுப்பினர் பெயர் தொழில், விரல்ரேகை உள்ளிட்ட முழு குடும்ப விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த அடையாள அட்டை வழங்கும் பணியை நாளை (23-ந் தேதி) காஞ்சீபுரம் மாவட்டம் பட்டிபுலம் கிராமத்தில் நடைபெறும் விழாவில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தொடங்கி வைக்கிறார்.
           6 லட்சம் பேருக்கும் அடையாள அட்டைகள் தபாலில் அனுப்பப்படும். 2 மாதத்துக்குள் அனைவருக்கும் கிடைத்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் திருச்சி, கடலூர், அரியலூர் உள்பட 4 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்கான புகைப்படம் எடுத்தல், விரல்ரேகை, விழி படலம் பதிவு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வருகிறார்கள். இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7.12 கோடி. இதில் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 1/2 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...