ஜனநாயகத்திற்காக போராடிய லட்சக்கணக்கான அரபுக்களின் விருப்பங்கள் கிட்டத்தட்ட நிறைவேறும் வகையில் எகிப்தி தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் சிக்கலான தேர்தல் நடைமுறையை எகிப்திய மக்கள் எளிதாக கையாண்டு இஸ்லாமிய கட்சிகளுக்கு பெரும்பான்மையை அளித்து தாங்கள் யார் பக்கம்? என்பதை தெள்ளத் தெளிவாக அறிவித்துவிட்டனர்.
பாராளுமன்றத்தில் எகிப்தின் விவகாரங்களை இனி கவனிப்பது இஃவனுல் முஸ்லிமீன் என்ற முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டி பார்டி ஆகும். நீண்டகாலமாக அரபு சர்வாதிகாரிகளும், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியவாதிகளும் பயங்கரவாத பட்டம் சூட்டிய இஃவானுல் முஸ்லிமீன் அரபு சமூகத்தின் இதயங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதன் மறுக்கமுடியாத அறிகுறிகள் அங்கே இருந்து நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
இஸ்லாமிய வாதிகளின் கைகளில் அதிகாரம் கிடைத்தால் அவர்கள் நாட்டின் குடிமக்களுடைய கைகளை துண்டித்து, தலையை கொய்து, பெண்களின் முகத்தை மூடி இருட்டறைக்குள் தள்ளுவார்கள் என்பதுதான் இதுவரை மேற்கத்திய இஸ்லாமிய விரோத சக்திகளின் பிரச்சாரமாக இருந்துவந்தது. உண்மைக்கு சற்றும் பொருந்தாத இத்தகைய அவதூறு பிரச்சாரங்களின் முதுகெலும்பை முறிக்கும் விதமாக இஃவானும், இதர இஸ்லாமிய கட்சிகளும் எகிப்திய தேர்தலில் வெற்றியை ஈட்டியுள்ளன. அதேவேளையில், இந்த வெற்றி ஏராளமான சவால்களையும் எழுப்புகிறது. தனக்கும்,தனது பிள்ளைகளுக்கும், ராணுவத்திற்கும் தேசத்தை கொள்ளையடிப்பதற்கு சட்டத்தை இயற்ற சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கால் உருவாக்கப்பட்டதுதான் மஜ்லிசு ஷஅப் என்று அழைக்கப்படும் மக்கள் அவை. மக்களுடன் எவ்வித தொடர்பில்லாத இந்த அவை முபாரக் வருகை தரும்போது கைத்தட்டவேண்டும் என்பதை தவிர வேறு எந்தப் பணியையும் ஆற்றியதா? என்பது சந்தேகமே!
ராணுவத்தின் கரங்களில்தாம் தற்போதைய அரசின் கடிவாளம் உள்ளது. ஆகவே, அடிப்படையான அரசியல் சாசன மாற்றங்களை சாதிக்க இஃவானுல் முஸ்லிமீன் கண்ணும் கருத்துமாக தனது நகர்வுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். இருபது ஆண்டுகளாக சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் வலது கரமாக செயல்பட்ட தற்போதைய ராணுவ அரசின் தலைவர் ஹுஸைன் தன்தாவியின் அதிகார சிறகுகளை கத்தரிப்பதன் மூலமே எகிப்தில் ஜனநாயகம் என்பது நிதர்சனமாகும்.
இஸ்லாமிய கட்சிகள், எகிப்தின் சமூக-பொருளாதார பிரச்சனைகளை எவ்வாறு கையாளுவார்கள் என்பதையும் அந்நாட்டு மக்கள் கவனிப்பார்கள் என்பது நிச்சயம். வேலையில்லாத் திண்டாட்டமும், பட்டினியும் கோரத்தாண்டவம் ஆடும் ஒரு தேசத்தில் நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும், மக்கள் மனங்களில் இருந்து பயத்தை விரட்டுவதற்கும் இஃவான்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எகிப்து மக்கள் தொகையில் 10 சதவீத எண்ணிக்கையிலான காப்டிக் கிறிஸ்தவர்கள் இதுவரை இஃவான்கள் ஆட்சியில் அமருவதைக் குறித்து விமர்சிக்கவில்லை. ஆனாலும், அவர்களின் நம்பிக்கையை பெறுவதும் முக்கியமாகும்.
அனைத்து பிரிவு குடிமக்களுக்கும், பாதுகாப்பையும், நீதியையும் உறுதிச்செய்வதில் இஸ்லாமிய கட்சிகள் எவ்வளவு தூரம் வெற்றிப் பெறுகின்றன என்பதை உலகம் உற்று நோக்குகிறது. உயிர் தியாகிகளான இமாம் ஹஸனுல் பன்னாஹ் மற்றும் செய்யத் குதுபின் தலைமுறையினரான இஃவான்களுக்கு எகிப்திய பாராளுமன்றத்தின் தற்போதைய செசன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். கிடைத்த முதல் வாய்ப்பில் இஃவான்கள் வெற்றிப்பெற்றுவிட்டால் அவர்களை மக்கள் மனங்களிலிருந்தும், தேசிய நீரோட்டத்திலிருந்தும் அகற்ற இறைவன் நாடினால் அல்லாமல் இவ்வுலகில் எந்த சக்தியாலும் முடியாது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...