Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 04, 2012

மத்தியபிரதேச மாநிலத்தில் பசுவதைக்கு சிறைத்தண்டனை 7 ஆண்டாக அதிகரிப்பு

போபால்:பா.ஜ.க ஆளும் மத்தியபிரதேச மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டத்தை மீறுவோருக்கு சிறைத் தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பான திருத்த மசோதாவை குடியரசு தலைவர் அங்கீகரித்துவிட்டதாகவும், ஆதலால் இச்சட்டம் அமுலுக்கு வந்துள்ளதாகவும் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.

பசுவதை தடைச்சட்டத்தை கடந்த ஆண்டு மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததன் மூலம் 2004-ஆம் ஆண்டு நிறைவேற்றிய ‘கோ வம்ச ப்ரதிஷேட் அதிநியமம்’ என்ற சட்டம் வழக்கொழிந்தது.

பசுவதை தடை சட்டத்தை மீறுவோருக்கு குறைந்த அபராதமாக 5 ஆயிரம் ரூபாய் விதிக்கவும் இச்சட்டத்தில் பிரிவு உள்ளது. நீதிமன்றங்கள் இத்தொகையை அதிகரிக்கலாம். பசுக்களை கொல்வதற்காக வாகனத்தில் கொண்டு செல்வோரும் தண்டனையை பெறுவர். ஹெட் கான்ஸ்டபிளுக்கு மேல் ராங்குடைய அதிகாரிகளுக்கு பரிசோதனை நடத்தவும், வழக்கு பதிவுச்செய்யவும் அதிகாரம் உள்ளது.

புதிய மசோதா குடியரசு தலைவரின் அங்கீகாரத்திற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...