Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 23, 2011

உருது அகாடமி ஆட்சிக்குழு திருத்தி அமைப்பு: கருணாநிதி உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் கருணாநிதி இஸ்லாமிய சமுதாய மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று உருது மொழி வளர்ச்சிக்காக 8-3-2000 அன்று, “தமிழ்நாடு மாநில உருது அகாடமி” என்னும் அமைப்பை உருவாக்கினார்.

இந்த உருது அகாடமியின் ஆட்சிக்குழு முதல்- அமைச்சர் கருணாநிதியால் 18-2-2007 அன்று திருத்தியமைக்கப்பட்டது. அக்குழு உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் உருது அகாடமியின் ஆட்சிக் குழுவினைத் திருத்தியமைத்து முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆட்சிக்குழுத் தலைவராகவும், சென்னை பல்கலைக்கழகத்தில் பன்மொழி அகராதித் திட்ட உறுப்பினராகப் பணியாற்றிய ஏ.எஸ்.சஜ்ஜத் புஹாரி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல் ரஹ்மான், சென்னை பல்கலைக்கழக பெர்சியன் மற்றும் உருது மொழித் துறைத் தலைவர் பி.நிசார் அகமது, திருச்சி ஜமால் முகமது கல்லூரி உருது மொழித்துறை உதவிப் பேராசிரியர் பி.அகமது பாஷா, கிருஷ்ணகிரி முக்தார் பத்ரி, வாணியம்பாடி முகம்மது யாகூப் அஸ்லாம், சென்னை மீயாஸி உருது அகாடமி தலைவர் முகம் மது அஷ்ரப், கோவை அஞ்சு மன்-இ-உருது நிறுவனச் செயலாளர் சையத் பைய்ஸ் காதிரி, சென்னை மாலிக்குல் அசீஸ். சென்னை புதுக்கல்லூரி உருதுத்துறை உதவிப் பேராசிரியர் முசாபருதீன், சென்னை அஷ்பகூர் ரஹ் மான், கோவை கலீம், சென்னை அலீம் சபாநவீதி, சென்னை பல்கலைக்கழக உருதுத் துறை பேராசிரியர் சஜ்ஜத் உஸ்ஸைன். வாணியம்பாடி மௌலானா ஆசாத், தேசிய உருது பல்கலைக்கழகத் கல்வி மையப் பொறுப்பாளர் சுகைல் அகம்மது, சென்னை எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரி உருது மொழித் துறைத் தலைவர் ஷஹீரா உம்மே ஷஹலா ஆகிய 15 பேரை உறுப்பினர்களாகவும் முதல்- அமைச்சர் கருணாநிதி நியமனம் செய்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:மாலைமலர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...