Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 19, 2011

ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய அரசியல் கட்சி உதயமாகிறது!

ஜமாஅத்தே இஸ்லாமியின் சார்பாக புதிய அரசியல் கட்சி வருகிற மார்ச் மாதம் உதயமாகிறது. கட்சியின் பெயரை தீர்மானிக்க மார்ச் ஐந்தாம் தேதி நடக்கும் கூட்டத்திற்கு பிறகு கட்சி பிரகடனம் செய்யப்படும்.

பீப்பிள்ஸ் வெல்ஃபயர் பார்டி, ஜஸ்டிஸ் பார்டி ஆஃப் இந்தியா, வெல்ஃபயர் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி ஆகிய நான்கு பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. கட்சிக்கு ஹிந்தி மொழியில் பெயர் சூட்டவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ பிரகடனம் மார்ச் மாதம் நடைபெறும் என ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் டாக்டர்.எஸ்.க்யூ.ஆர்.இல்யாஸ் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து டாக்டர் எஸ்.க்யூ.ஆர்.இல்யாஸ் கூறியதாவது: "இந்தியாவில் சமமான சிந்தனையுடைய பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதுக் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்கள் பலருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் முஸ்லிம் லீக்கில் இரண்டு பிரிவுகள், இந்திய தேசிய லீக் ஆகியவற்றுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐயுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இத்தகைய பேச்சுவார்த்தைகள் இதர மாநிலங்களிலும் நடத்தப்படும். பிப்ரவரி மாதம் கட்சி செயல்படத்து வங்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தாலும், பேச்சுவார்த்தைகள் முடிவடையாததால் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக இல்லியாஸ் தெரிவித்தார்.

இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கும், இதர ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சமமான நீதி கிடைக்கவேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் கட்சி செயல்படும். கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் ஷூரா ஏற்கனவே அங்கீகாரம் அளித்துள்ளது. ஜமாஅத்தே இஸ்லாமியின் உள்ளூர் கிளைகளின் மேற்பார்வையில் அரசியல் கட்சி செயல்படும்.

கட்சியின் சட்டத் திட்டங்கள், கொள்கைகளை தீர்மானிப்பதற்கான கூட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்துவருகின்றன. பல்வேறு காரியங்களில் ஜமாஅத்தே இஸ்லாமியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் கொள்கைகள் அமையும். எல்லா பிரிவினரும் கட்சியில் உறுப்பினர்களாக சேர வாய்ப்புகள் உருவாகும். தலைமையிலும் முஸ்லிம் அல்லாத தலைவர்கள் இடம்பெறுவர். எல்லா பிரிவு மக்களின் மனித உரிமைகளுக்காகவும், அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளுக்காகவும் போராடுவதுடன் ஒழுக்க ரீதியிலான விழுமியங்களுக்கும் கட்சி முக்கியத்துவம் அளிக்கும்." இவ்வாறு இல்லியாஸ் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ்&பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...