லிபியாவில் 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் முவாம்மர் கடாபி பதவி விலக வலியுறுத்தி அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று 6-வது நாளாக போராட்டம் நடந்தது. தலைநகர் டிரிபோலி, பென் காசி, கவுர்லி, கோபுரக், அல்-பாஸ்டா, மில்ரதா உள் ளிட்ட நகரங்களில் கலவரம் பரவியுள்ளது.
கலவரத்தை அடக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் துப்பாக்கி மற்றும் கனரக ஆயுதங்களை போராட்டக் காரர்கள் மீது பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்கள் தவிர அதிபர் கடாபியின் ஆதரவாளர்களும் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடு படுபவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.
தலைநகர் டிரிபோலிக்கு அடுத்த படியான பெரிய நகரமான பென்காசியில் கலவரத்தில் பலியானவர்களின் இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானவர்கள் மீது ஹெலிகாப்டரில் பறந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர்.
ஏராளமானோர் காயம் அடைந்தனர். அதே போன்று, நேற்று நடந்த இறுதி ஊர்வலத்திலும், ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். எந்திர துப்பாக்கிகளால் சுட்டதில் பலர் மடிந்தனர். நேற்று முன்தினம் வரை 84 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது. இந்த தகவலை மனித உரிமை கமிஷன் தெரி வித்துள்ளது. இதற்கிடையே அங்கு போராட்ட செய்திகளை பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக சேகரிக்க முடிய வில்லை.
கலவர செய்திகள், போட்டோக்கள் போன்றவை அங்கிருந்து நாடு கட்டத்தப்பட்டவர்கள் மூலம் டெலிபோன் மற்றும் வீடியோ ஆக கிடைக்கிறது. போராட்டக்காரர்களின் மிரட்டலுக்கு தாங்கள் அஞ் சப்போவதில்லை.
போராட்டத்தை ஒடுக்கியே தீருவோம் என அதிபர் கடாபியின் மகன் சாய்ப் அல்-இஸ்லாம் தெரிவித்துள்ளார். அரசு டெலிவிஷனில் அவர் உரை நிகழ்த்தினார். அப்போது, லிபியாவில் உள்நாட்டு போர் ஏற்படும் என போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
லிபியாவை உடைத்து குட்டி நாடுகளை உருவாக்க முயற்சி நடக்கிறது. அவ்வாறு நடந்தால் லிபியாவுக்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைக்காது. இதனால் வளர்ச்சி திட்டம் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...