தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தால் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். கடலூர் அடுத்த வெள்ளக்கரை, புவனகிரி அடுத்த ஆயிபுரம் ஆகிய கிராமங்களில் தலா 21.79 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் மீரா வரவேற்றார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கமலக் கண்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சண்முகம், கல்விக்குழுத் தலைவர் ஜெயபால், ஊராட்சித் தலைவர் ஜெயபால் வாழ்த்திப் பேசினர்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய கட்டடங்களை திறந்து வைத்து பேசியதது:
கடலூர் மாவட்டத்தில் 9 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது. இதுமக்களுக்கு எந்த சிரமமும் இன்றி சிகிச்சை பெறுவதற்கு அவர்களின் கோரிக்கைகளை ஏற்று முதல்வரின் அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளது. மகப்பேறு நிதியுதவியால் தமிழகத்தில் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தும் முதல்வருக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.ஜெயச்சந்திரன், இந்திரா ராமச்சந்திரன், செல்வரங்கன், முத்து பெருமாள், முடிவண்ணன், டாக்டர்கள் ரூபாவதி, மேகலா உட்பட பலர் பங்கேற்றனர்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...