Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 25, 2011

கடலூர் செல்போன் சேவையை அதிகரிக்க மேலும் 128 டவர்கள்

கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் (விழுப்பரம், கடலூர் வருவாய் மாவட்டங்கள்) பி.எஸ்.என்.எல். செல்போன் சேவையை மேம்படுத்த, மேலும் 128 செல்போன் டவர்கள் அமைக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். மாவட்டப் பொது மேலாளர் மார்ஷல் ஆன்டனி லியோ தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆதரவுடன், சென்னை சி.ஏ.ஐ. நுகர்வோர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு இணைந்து செல்போன் பயன்படுத்துவோருக்கான ஆலோசனைக் கருத்தரங்கை கடலூரில் வியாழக்கிழமை நடத்தின.
கருத்தரங்க தொடக்க விழாவில் பொதுமேலாளர் மார்ஷல் ஆன்டனி லியோ கூறியது:

கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் தற்போது 1 லட்சம் தரைவழி தொலைபேசி இணைப்புகள் உள்ளன.166 தொலைபேசி இணைப்பகங்கள் உள்ளன. செல்போன் சேவைக்காக 360 டவர்கள் உள்ளன. செல்போன் சேவையை மேம்படுத்த மேலும் 60 டவர்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு 68 டவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.கிராமப்புறங்களில் 30 ஆயிரம் வில் தொலைபேசி இணைப்புகளும், 55 வில் தொலைபேசி நிலையங்களும் உள்ளன.

தொலைபேசி இணைப்புகளில் எந்த பிரச்னை என்றாலும் 3 நாள்களில் சரி செய்து விடுகிறோம். கிராமங்களில் குறைந்த செலவில் அகண்ட அலைக்கற்றை இணைப்புகளை வழங்கி வருகிறோம்.
இந்தியாவில் அகண்ட அலைக்கற்றை சேவையில் பி.எஸ்.என்.எல். முதல் இடம் வகிக்கிறது.

கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் 62 பயிற்சி மையங்கள், 400 அரசுப் பள்ளிகள், 30 கல்லூரிகள் மற்றும் 700 அரசு அலுவலகங்களில் அகண்ட அலைக்கற்றை சேவையை பி.எஸ்.என்.எல். சிறப்பாக வழங்கி வருகிறது.
சென்னையில் 100 பேருக்கு 115 செல்போன்கள் என்ற அளவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்றார் மார்ஷல் ஆன்டனி.நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கல்யாணம் பேசுகையில், "பல்வேறு சேவைகளில் மாநில அரசு அலுவலகங்களைவிட மத்திய அரசு அலுவலகங்களில் சேவைகள் சிறப்பாக உள்ளன.

அந்த வகையில் பி.எஸ்.என்.எல். சேவையும் சிறப்பாக உள்ளது. அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் பி.எஸ்.என்.எல். செல்போன்களுக்கு கட்டணம் செலுத்த காலஅவகாசம் 15 நாள்களில் இருந்து 30 நாள்களாக உயர்த்த வேண்டும்.
ஏனென்றால் அரசுக் கணக்கில் இருந்து பணம் பெற்று கட்டணம் செலுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன' என்றார்.
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட சிறார் நீதிமன்ற உறுப்பினர் சுஜாதா சீனிவசன், கடலூர் நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் கலையரசி ராமதாஸ் ஆகியோர் பேசினர்.
÷சி.ஏ.ஐ. தொண்டு நிறுவன பொறுப்பாளர் நிர்மலா தேசிகன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் செந்தமிழ்செல்வன் வரவேற்றார்.
நெல்லிக்குப்பம் நுகர்வோர் மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
கருத்தரங்கில், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ், ஆலோசகர் கவிஞர் பால்கி, விழுப்புரம் நுகர்வோர் அமைப்பின் தலைவர் நூர்அகமது உள்ளிட்டோர் செல்போனை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் தேவைக் குறைபாடுகள் மற்றும் அவற்றை நிவர்த்தி செயவதற்கான வழிமுறைகள், செல்போன் ஒழுங்குமுறைச் சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
டி.வேம்பு நன்றி கூறினார்.
source:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...