மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே தலன்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு மலைவாழ் மக்கள் 3,000 பேர் வசிக்கிறார்கள். இந்த ஊரில் பெரும் பாலான ஆண்களுக்கு குடிப்பழக்கம் உண்டு.
இதனால் அவர்கள் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி மார்களை கொடுமைப்படுத்துவது அதிகரித்தது. இதையடுத்து பெண்கள் ஒன்று கூடி மகிலா சமிதி என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
இதன் தலைவியாக 30வயது புனி பாய் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார். இந்த அமைப்பு ஆண்களின் குடிப்பழக்கத்தை ஒழிக்க கிராமத்துக்குள் யாரும் சாராயம் விற்க கூடாது என்று தடை விதித்தது உள்ளது. மீறி சாராயம் விற்றால் ரூ.2100 அபராதம் விதிக்கப்படும்.
யாராவது குடிபோதையில் கிராமத்துக்குள் வந்தால் அவர்களுக்கு ரூ.1100 அபராதம் விதிக்கப்படும். சாராயம் விற்பவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.151 பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தலன்பூர் கிராமம் குக்ஷி சட்டசபை தொகுதிக் குட்பட்டது ஆகும். இந்த தொகுதி எம்.எல்.ஏ. இறந்து விட்டதால் அங்கு வருகிற 14-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
தேர்தல் பிரசாரத்துக்கு வரும் அரசியல் கட்சியினர் தொண்டர்களுக்கு சாராயம் விநியோகம் செய்யக்கூடாது என்றும் நிபந்தனை விதித்து உள்ளனர்.
பெண்கள் ஒன்று கூடி சாராயத்துக்கு தடை விதித்து இருப்பதால் குடிமகன்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது.
thanks:manarkenitimes

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...