Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 02, 2011

பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது.

செய்முறை தேர்வு (PARATICAL EXAM)
ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடைபெறும். அதன்படி கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு வருகிற 3-ந் தேதி(வியாழக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி(வெள்ளிக்கிழமை)-யுடன் முடிவடைகிறது. அந்தந்த பள்ளிகளின் வசதிக்கேற்ப செய்முறை தேர்வு நடக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் 165 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 538 மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வு எழுதுகிறார்கள். இதில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 110 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 298 மாணவர்களும், 10 ஆயிரத்து 666 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 955 மாணவர்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 55 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 974 மாணவர்களும், 3 ஆயிரத்து 69 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 583 மாணவர்களும் எழுதுகிறார்கள்.
ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் செய்முறை தேர்வுகளை சிறப்பாக நடத்துவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடந்தது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகளை வழங்கி, செய்முறை தேர்வுக்கான வினாத்தாள்களையும் வழங்கினார்.

இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பாரதமணி(கடலூர்), பத்ரு(விருத்தாசலம்), மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அருள்மொழி, முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 165 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Source: dailythanthi

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...