Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 14, 2011

எகிப்து மக்கள் எழுச்சியில் இஃவான்களின் பங்கு என்ன?

தஹ்ரீர் சதுக்கத்தை மையமாக வைத்து கடந்த 18 தினங்களாக நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தை அமைதியான முறையில் நிர்வகித்தது யார்? என்ற கேள்விக்கு பதிலாக அனைவரும் சுட்டிக் காட்டுவது எகிப்தின் பிரதான எதிர்கட்சியான இஃவானுல் முஸ்லிமீன் இயக்கமாகும்.


மக்கள் எழுச்சிப் போராட்டம் வலுப்பெறுவதற்கு இணையதளமும், அல்ஜஸீராவும் முக்கிய பங்கு வகித்த பொழுதிலும் வலுவான தலைமையில்லாமல் இந்த மக்கள் புரட்சி வெற்றிப் பெறவியலாது என்பதைத்தான் இஃவான்களின் பங்களிப்பு நமக்கு உணர்த்துகிறது.

1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இஸ்மாயிலியா நகரத்தில் ஆசிரியரும், இஸ்லாமிய மார்க்க அறிஞருமான இமாம் ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்...) அவர்கள் இஃவானுல் முஸ்லிமீன் என்ற இலட்சிய இயக்கத்தை துவக்கினார்கள்.

எகிப்தில் அதிகரித்துவந்த மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிராக இஸ்லாமிய தற்காப்பும் மக்கள் சேவையும்தான் முக்கிய அஜண்டா(செயல்திட்டம்).

இஃவானுல் முஸ்லிமீன் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட பிறகுதான் மேற்கத்தியவாதிகளுக்கு எதிரான எதிர்ப்பு போராட்டத்திற்கு உரு கொடுக்கப்பட்டது. மாணவர்களும், பெண்களும், தொழிலாளர்களும் இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்திற்கு பின்னால் அணிவகுத்தனர். இஃவான்கள் துவங்கிய நாளிதழும், சிறிய கையேடுகளும் மக்களிடையே செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இஃவான்கள்களை ஆட்சியாளர்கள் அடக்கி ஒடுக்கத் துவங்கினர்.

1948-ஆம் ஆண்டு இஃவானுல் முஸ்லிமீன் இயக்கம் முதன்முறையாக தடை விதிக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி இமாம் ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்...) கொலைச் செய்யப்பட்டார். 1953-ஆம் ஆண்டு நஜீபை வெளியேற்றிவிட்டு ஜமால் அப்துல் நாஸரின் தலைமையிலான ராணுவம் சுப்ரீம் கவுன்சில் எகிப்தி ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து 1954-ஆம் ஆண்டு இஃவானுல் முஸ்லிமீன் இயக்கம் மீண்டும் தடைச் செய்யப்பட்டது.

இஃவானுல் முஸ்லிமின் சித்தாந்தவாதியும், உலகப் புகழ்பெற்ற மிகச்சிறந்த சிந்தனையாளருமான செய்யத் குத்ப்(ரஹ்...) அவர்கள் 1966 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். பின்னர் அன்வர் சதாத் அதிபராக பதவியேற்ற பிறகும் இஃவான்கள் மீதான தடை தொடர்ந்தது.

1979-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நிர்பந்தத்தால் இஸ்ரேலுடன் அன்வர் சதாத் உருவாக்கிய கேம்ப் டேவிஸ் ஒப்பந்தத்தின் மூலம் எகிப்தில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் வலுவடைந்தது.

1981 ஆம் ஆண்டு ஹுஸ்னி முபாரக் பதவியேற்ற பொழுது இஃவான்களுக்கு மீண்டும் தடை போடப்பட்டது. இஃவானுல் முஸ்லிமீன் உறுப்பினர்களுக்கு கடுமையான சித்திரவதைகள் அளிக்கப்பட்டன. ஆனால், 2005-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேட்சைகளாக போட்டியிட்ட இஃவான் வலுவான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியது.

தற்பொழுது நடைபெறும் எகிப்து புரட்சிப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் நபர்களின் அடையாள அட்டைகளை பரிசோதித்து அனுமதியளித்தது இஃவானுல் முஸ்லிமீன் இயக்க உறுப்பினர்களாவர். போராட்டத்திற்கு மேற்கத்திய சக்திகளின் எதிர்ப்பை முதலிலேயே கண்டுகொண்ட இஃவான்கள் தங்களது நடவடிக்கையை மிகக்கச்சிதமாக நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.
source: manarkeni times

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...