Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 29, 2010

புழல் சிறையில் முஸ்லிம்கள் உண்ணா நிலை போராட்டம்!

விசாரணைகள் முடிந்த நிலையிலும், தீர்ப்பு வழங்கப்படாமல் தாமதிக்கப்படுவதை கண்டித்து, கடந்த 12 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தடா கைதிகள், 27.04.2010 அன்று உண்ணாவிரதம் இருந்தனர்.சென்னை புழல் மத்திய விசாரணை சிறையில், முபாரக் அலி, அப்துல் ரஹீம், முஹம்மது அலிகான் குட்டி என்கிற சத்தியமங்கலம் குட்டி, குனங்குடி ஹனீஃபா(60), அலி அப்துல்லாஹ், ஏர்வாடி காசிம், ஷம்ஜித் அஹமது மற்றும் ரியாசுதீன் ரஹ்மான் என்ற எட்டு 'தடா' கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். குனங்குடி ஹனீஃபாவைத் தவிர மற்றவர்கள் 35 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.இவர்கள் 1997ம் ஆண்டு சேலம், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டங்களில் நடந்த, தொடர் ரயில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீன் ஏதும் கிடைக்காத நிலையில், தொடர்ந்து சிறையில் உள்ளனர்.தற்போது புழல் சிறையில் உள்ள இவர்களில் ரியாசுதீன் ரஹ்மான் மட்டும் அப்ரூவராக மாறியதால், முதல் வகுப்பு சிறையில் உள்ளார். மற்றவர்கள் சாதாரண சிறையில் உள்ளனர். இவர்கள் தொடர்பான வழக்கு சென்னை பூந்தமல்லி தடா சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால், அன்று தீர்ப்பு வழங்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இம்மாதம் (ஏப்ரல்) 7ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. மீண்டும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மேற்கொண்டு விசாரிக்க வேண்டிய சாட்சிகள் ஏதும் இல்லாத நிலையில், அவரவர் தரப்பு வாதங்கள் முடிவுற்றதால், ஏப்ரல் 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறி தள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில் 'தற்போது வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி பிரேம்குமார், மாற்றப்பட உள்ளார்; புதிய நீதிபதி வந்த பின்னரே தீர்ப்பு வழங்கப்படும்' என்ற தகவல் 'தடா' கைதிகளுக்கு கிடைத்தது. புதிய நீதிபதி பொறுப்பேற்று, ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட வழக்கின் சாட்சிய ஆவணங்களை படித்து முடித்து, அதன்பின் தீர்ப்பு வழங்க மீண்டும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கடந்து, காலதாமதமாகி விடும் என, அதிர்ச்சி அடைந்தனர். எனவே, தற்போதுள்ள நீதிபதியை மாற்றக் கூடாது; வழக்கின் தீர்ப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரினர்.இது குறித்து தங்கள் மீதான கவன ஈர்ப்பாக, நேற்று (திங்கள்) முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து, அதற்கான கடிதத்தை கடந்த 22ம் தேதி சிறைத்துறை எஸ்.பி., ராஜேந்திரனிடம் அளித்தனர். நேற்று காலை 6 மணி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ரியாசுதீன் ரஹ்மான் தவிர, மற்ற ஏழு பேரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இதனால், சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்களுக்கான வக்கீல் மூலம், நீதிபதி மாற்றமில்லை என்ற தகவல் கிடைத்தது. உண்ணாவிரதத்தை கை விடக்கோரி, சிறைத்துறை அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து உண்ணாவிரதத்தை தடா கைதிகள் கை விட்டு, மாலை 6 மணிக்கு உணவு சாப்பிட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...