Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 16, 2010

பாதையை விட்டு விலகியது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2}வது ஏவுதளத்தில் இருந்து மஞ்சள் நிறப் புகையைக் கக்கி கொண்டு விண்ணில் சீறிப் பாயும் ஜி

இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட், இஸ்ரோவின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது."ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் கிரையோஜெனிக் என்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதா, இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ராக்கெட் திசை மாறியதற்கான காரணம் ஓரிரு தினங்களில் கண்டறியப்படும்'' என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட் மற்றும் ஜிசாட் 4 செயற்கைக்கோளின் மொத்த மதிப்பு ரூ.420 கோடியாகும். இ

தில் ராக்கெட்டின் மதிப்பு மட்டும் ரூ.170 கோடியாகும். ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் மொத்த எடை 416 டன்னாகும். சுமார் 2,000 விஞ்ஞானிகளின் கூட்டுமுயற்சியில் 18 ஆண்டு கடும் உழைப்பில் கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. "குறைகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் கூடிய ராக்கெட் ஓராண்டுக்குள் ஏவப்படும்' என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து ஜிசாட்4 செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட் 29 மணி நேர கவுன்டவுனுக்குப் பிறகு வியாழக்கிழமை மாலை 4.27 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் மஞ்சள் நிறப் புகையை கக்கி கொண்டு விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்தது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குளிர்விக்கப்பட்ட "கிரையோஜனிக்' என்ஜின் மூலம் ஜி.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை உலக நாடுகள் பலவும் கவனித்து வந்தன.

ஏறத்தாழ 1022 விநாடிகளில் ராக்கெட் 36,000 கிலோ மீட்டர் கடந்து, ஜிசாட்4 செயற்கைக்கோளை புவி வட்ட சுற்றுப் பாதையில் செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.ராக்கெட்டின் மொத்த பயண நேரமான 1022 விநாடிகளில், 720 விநாடிகள் கிரையோஜெனிக் என்ஜின் மூலமே ராக்கெட் செலுத்தப்பட இருந்தது.ராக்கெட் ஏவப்பட்ட சில நொடிகளில் முதல் நிலையை (திட எரிபொருள்) தாண்டியது. அடுத்து இரண்டாவது நிலையையும் (திரவ எரிபொருள்) தாண்டி ராக்கெட் விண்ணில் சென்று கொண்டிருந்தது.ஒவ்வொரு நிலையையும் ராக்கெட் தாண்டிச் செல்ல, சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த விஞ்ஞானிகள் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்தபடி இருந்தனர். சில நொடிகளில் 2வது நிலையைத் தாண்டி, குளிர்விக்கப்பட்ட கிரையோஜெனிக் நிலையை ராக்கெட் எட்டியது. கிரையோஜெனிக் நிலைக்குச் சென்றதும் குலுங்கிய ராக்கெட் எதிர்பார்த்த பாதையிலிருந்து விலகியது.அடுத்த விநாடியே, கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், ராக்கெட்டின் சிக்னலைப் பெற பலவாறு முயன்று தோல்வியுற்றனர்.சற்று நேரத்தில், இஸ்ரோவின் கட்டுப்பாட்டை இழந்த ஜி.எஸ்.எல்.வி. டி}3 ராக்கெட், கடலில் விழுந்தது. கட்டுப்பாட்டு அறையில் இருந்த நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் கிரையோஜெனிக் என்ஜின் வெற்றியடையாததால் சோகத்தில் ஆழ்ந்தனர். அங்கிருந்த மூத்த விஞ்ஞானிகளில் பலர் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணனுக்கு ஆறுதல் கூறியபடி இருந்தனர். கட்டுப்பாட்டு அறையே சோகமயமாக மாறியது. ஓராண்டுக்குள் அடுத்த ராக்கெட்: பின்னர், கட்டுப்பாட்டு அறையில் இருந்த இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் பேசியது:ஜி.எஸ்.எல்.வி.}டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது. முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையையும் தாண்டி சென்றது. விண்ணில் ஏவப்பட்டதிலிருந்து 293 விநாடிகள் சீராகப் பயணித்த ராக்கெட், மூன்றாம் நிலைக்குச் (கிரையோஜெனிக்) சென்றது. அப்போது ராக்கெட் சிறிது குலுங்கி, அதன் பாதையிலிருந்து விலகிச் சென்று கடலில் விழுந்தது. இஸ்ரோவின் கட்டுப்பாட்டையும் அது இழந்தது. இதில் கிரையோஜெனிக் என்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதா என்று உறுதியாகத் தெரியவில்லை. கிரையோஜெனிக் தோல்வி குறித்து 2, 3 நாள்களில் ஆய்வு செய்யப்படும். ஓராண்டுக்குள் மீண்டும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் செலுத்தப்படும். மீண்டும் சாதிப்போம் என்ற நம்பிக்கை இஸ்ரோவிடம் உள்ளது. மிகவும் சிக்கலான கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை கையாண்டுள்ளோம்.

இத்தொழில்நுட்பத்தில் நாம் பயணிக்க வேண்டியது நீண்ட தொலைவு உள்ளது.செப்டம்பரில் ஜி.எஸ்.எல்.வி.: வரும் செப்டம்பரில் ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்பட உள்ளது என்றார் அவர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...