Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 30, 2010

கான்சாகிப் வாய்க்காலில் நகராட்சி கழிவுநீர் கலப்பு: 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு

சிதம்பரம் நகரை கடந்து செல்லும் கான்சாகிப் வாய்க்கால் என்னும் பாலமான் ஓடையில் நகராட்சி மற்றும் மருத்துவமனைக் கழிவுநீர் கலந்து கறுப்பு நிறமாகக் காட்சியள

சிதம்பரம் நகரை கடந்து செல்லும் கான்சாகிப் வாய்க்கால் என்னும் பாலமான் ஓடையில் நகராட்சி கழிவுநீர் கலப்பதால் அதை நம்பியுள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாய சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கீழணை மதகிலிருந்து உருவாகக்கூடிய கொள்ளிடம் வடக்குராஜன் வாய்க்கால் 45 கி.மீ. காட்டுமன்னார்கோவில் புளியங்குடி வரை அமைந்துள்ளது. புளியங்குடி கோப்பாடி மதகிலிருந்து கான்சாகிப் வாய்க்கால் உருவாகி 41.08 கி.மீ. தூரத்துக்கு வெள்ளாற்றில் வடிகிறது. கான்காகிப் வாய்க்கால் செல்லும் பாதையில் 25.2 கி.மீ. தொலைவில் சிதம்பரம் நகரத்தை கடந்து செல்கிறது.
இந்த கான்சாகிப் வாய்க்காலில் சிதம்பரம் நகரில் பாலமான் என்னுமிடத்தில் அரசு மருத்துவமனை கழிவு, நகராட்சி கழிவு நீர், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீர் ஆகியவை கலந்து 15 கி.மீ. தூரத்துக்கு கழிவுநீராகதான் உள்ளது. இக்கால்வாயில் உள்ள 34 மதகுகள் மற்றும் இதர வடிகால்கள் மூலம் 9994 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. இக்கால்வாயின் முழு நீர்க்கொள்ளளவு 240.89 கனஅடியாகும். இக்கால்வாயில் எண்ணற்ற நிலங்களின் நீர்பிடிப்பு தண்ணீரும், வீராணம் ஏரியின் உபரிநீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்பட்டு இதில் வந்து சேருகிறது. சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் பழுதடைந்துவிட்டதால் பல இடங்களில் புதை சாக்கடை நீர் திறந்தவெளி சாக்கடையில் விடப்பட்டுள்ளன.
அந்த கழிவுநீர் பஸ் நிலையத்துக்கு பின்புறம் ஓடும் கான்சாகிப் வாய்க்காலில் கொண்டு விடப்படுகிறது. சிதம்பரம் நகரில் ஏற்கெனவே உள்ள பாதாள சாக்கடைத் திட்டம் பழுதடைந்துவிட்டதால். ரூ.38 கோடி செலவில் புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அனுமதியளித்தது. அனுமதியளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் அந்த பணிக்கான டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை.தொகை குறைவாக உள்ளதால் யாரும் டெண்டர் எடுக்கவில்லை என்பதால் தற்போது அப்பணியை செயல்படுத்த ரூ.42 கோடியாக தொகை உயர்த்தப்பட்டது. அப்படியும் இன்று வரை யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. தற்போது பாதாள சாக்கடை நீர் ஆங்காங்கே திறந்தவெளி வடிகாலில் வெட்டி விடப்பட்டுள்ளன. இந்த புதை சாக்கடை கழிவுநீர் திறந்தவெளி சாக்கடை மூலம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள கான்சாகிப் வாய்க்காலில் கொண்டுவிடப்பட்டுள்ளன. மேலும் அரசு மருத்துவமனை கழிவுகளும் இந்த கால்வாயில் விடப்படுகிறது. இதனால் கான்சாகிப் வாய்க்கால் கழிவுநீர் குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட 75 ஆயிரம் மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் சிதம்பரம் நகரத்தில் 58 தங்கும் விடுதிகள், 23 திருமண மண்டபங்கள், 27 பெரிய உணவு விடுதிகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீர் திறந்தவெளி சாக்கடை மூலம் கான்சாகிப் வாய்க்காலில் கலக்கிறது. ஹோட்டல்கள், இறைச்சிக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கான்சாகிப் வாய்க்கால் கரையில் கொட்டப்படுகிறது. சிதம்பரம் நகரின் மேற்கு, தெற்கு திசைகளில் புதிதாக உருவாகியுள்ள நகர்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கழிவுகள் அனைத்தும் கான்சாகிப் வாய்க்காலில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறக்கப்பட்டு கீழணை வழியாக கான்சாகிப் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து சம்பா சாகுபடியும், அதன் அறுவடைக்கு பின்னர் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் நவரைப்பட்ட சாகுபடியும் செய்யப்படும். நவரைப்பட்ட சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் குறைந்த அளவு பாசன தண்ணீரோடு சிதம்பரம் நகராட்சி கழிவுநீர் கலந்துவிடுவதால் ஒட்டுமொத்த வாய்க்காலிலும் கழிவுநீர் கறுப்பாக காணப்படுகிறது. இந்த நீரை கொண்டுதான் விவசாயிகள் நவரைப்பட்ட சாகுபடி செய்ய வேண்டிய நிலை உள்ளது என உழவர் கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...