Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 01, 2010

தம்பி தலைக்கு மேல் கத்தி?

மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவும், திமுக கட்சியில் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் உள்ள மு.க. அழகிரி, கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வில் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்றும், அவரிடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் தன் கருத்தை முதன்முதலாக வெளிப்படையாகச் சொல்லியிருந்தார்.

இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில்,

’’ தி.மு.கழகத்தில் கட்சியின் தலைவர் யார் என்று ஒருவர் நினைத்து அதை நிறைவேற்றிவிட முடியாது. அவரவர்களைப் பொறுத்து -அப்படி முடிவு செய்யும் உரிமை ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உண்டு என்றாலும், அந்த முடிவை நிறைவேற்றுகின்ற அதிகாரம் எனக்குக் கூட இல்லை -கட்சிக்குத் தான் உண்டு’’என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு கடந்த 21ஆம் தேதி அரசு முறைப் பயணமாக சென்ற மு.க.அழகிரி நேற்று இரவு சென்னை திரும்பினார்.

சென்னை திரும்பும் மு.க.அழகிரியை வரவேற்க, கட் அவுட்டுகள், போஸ்டர்கள் என அகில இந்திய மு.க.அழகிரி பேரவை சார்பில் பிரமாண்டமாக வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டைப்போல கூட்டம் கூடியதில் சென்னை விமான நிலையமே திணறியது .


இன்று சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டார். மதுரை செல்வதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, ‘’தலைவர் கலைஞர் சொன்னதை நான் ஏற்கிறேன். கட்சி சார்பில் தேர்தல் நடத்தி முடிவு செய்வதுதான் முறையானது. அதை நான் ஏற்கிறேன்.

ஆனால், கலைஞருக்கு பிறகு யாரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்று சொல்லுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது.

ஜனநாயக முறைப்படி தலைமைக்கு தேர்தல் நடந்தால் நான் அதில் போட்டியிடுவேன்’’(???????)என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...