Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 17, 2010

வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைப்பதில் கால தாமதம்

கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைப்பதில், பெருத்த காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஏராளமானோர் ஒரு மாதத்துக்கும் மேலாக மின் இணைப்பு கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு பணம் செலுத்திய அன்றே மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று மின் வாரிய விதிமுறைகள் உள்ளன. ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு பணம் செலுத்திவிட்டு இணைப்பு கிடைக்காமல், காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாறு காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
மின்சார மீட்டர்கள் தட்டுப்பாடே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மின்வாரியத் தலைமை அலுவலகம், மின்சார மீட்டர்கள் வழங்குவதில் பிரச்சனை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்தின் தேவைக்கு ஏற்ப மின் வாரியம், மின்சார மீட்டர்களை வழங்கவில்லை என்று கடலூர் மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து கடலூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் ரவிராம் கூறியது:
மின்சார மீட்டர் விநியோகத்தில் கடந்த ஒரு மாதமாகப் பிரச்னை உள்ளது. மீட்டர்கள் வரவர, 6 டிவிஷன்களுக்கும் பிரித்துக் கொடுத்து மின்இணைப்புகளை வழங்கி வருகிறோம். வாரியத்தால் வழங்கப்படும் மின்சார மீட்டரில் 60 சதவீதம் புதிய இணைப்புகளுக்கும், 40 சதவீதம் ஏற்கெனவே பொருத்தப்பட்டு பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவதற்கும் வழங்க வேண்டும் என்றும் மின்வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது. காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் விரைவில் இணைப்பு வழங்கி விடுவோம் என்றார் ரவிராம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...