Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 22, 2010

ஆஃப்கானில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் உற்பத்தியில் மேற்குலக படைகளின் பங்களிப்பு - ஆஃப்கான் எம்.பி


கள்ளத்தனமான போதை பொருட்களை வெளிநாட்டு இராணுவத்தினர் உற்பத்தி செய்து கடத்துவதாக ஆஃப்கானின் எம்.பி நஸிமா நியாஜி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் கஞ்சா செடியை எப்படி பயிரிட்டு வளர்ப்பது என்பது பற்றி ஆப்கன் மக்களுக்கு பிரிட்டிஷ் இராணுவத்தினர் பயிற்சி கொடுப்பதாகவும் தகவல் தெரிவித்தார்.

ஆஃப்கனின் அந்நியப்படைகள் தொடர்ந்து இருக்கும் வரை கஞ்சா பயிரிடுவதும், வளர்ப்பதும் மற்றும் கஞ்சா கடத்தலும் தொடரும் என எஃப்.என்.ஏ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நஸிமா நியாஜி கூறினார்.

ஆஃகானில் அந்நிய இராணுவத்தின் செலவுகளை ஈடுசெய்யும் அளவிற்கு ஹெல்மண்ட் பிராந்தியத்தில் அப்படைகள் பயிரிடும் கஞ்சாக்கள் நிவர்த்தி செய்கின்றன. அமெரிக்கா ஆஃப்கானில் நுழைவதற்கு முன்பாக ஒரு கடுகளவேனும் ஹெராயின் இப்பிராந்தியத்தில் இல்லை என்றும் நியாஜி கூறினார்.

தான் அந்த பிராந்தியத்திற்கு சென்ற பொழுது அந்நியப்படைகள் கஞ்சா செடிகளை அழிப்பது போல் பாவலா காட்டினார்கள். ஆனால் எதார்த்தத்தில் அந்நியப்படைகள் தான் பயிரிட்டு வளர்த்து வருகிறார்கள் என்பதை தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்ததாக கூறினார் அந்த பெண்மணி.

மேலும் அவர் கூறுகையில் ஆயுதம் தரிக்காத வாழ வசதியில்லாத தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்காக பயிரிடும் ஏழை விவசாயிகளின் பயிர்களை மட்டும் அழித்துவிட்டு பெரும் பணக்காரர்களின் கஞ்சாப் பயிர்களை மட்டும் பாதுகாக்கின்றனர் இந்த அந்நியப்படைகள்.

2001-ல் அமெரிக்கப்படைகள் ஆஃகானை கைப்பற்றியதிலிருந்து 40 மடங்கு கஞ்சா உற்பத்தி அதிகரித்துள்ளதாக ஈரான் அறிவிக்கிறது.ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து ஈரான் உலக அளவில் கஞ்சா கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக முயன்று வருகிறது.

தாலிபான்கள் தங்களால் முடிந்த அளவு எல்லா கஞ்சா பயிற்களையும் அழித்து வந்தார்கள். தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது 185 டன்கள் மட்டுமே வருடத்திற்கு உற்பத்தி செய்யப்பட்டன, ஆனால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு 3400 டன்கள் வருடத்திற்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. 2007-ல் மட்டும் 8200 டன்கள் வருடத்திற்கு உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேற்குலகமும் ஆஃகான் அரசும் அமெரிக்காவை இந்த விஷயத்தில் குற்றம் சுமத்துகின்றன. வாஷிங்டன் கஞ்சா உற்பத்தியை சிறிதும் கண்டுகொள்ள வில்லை, மாறாக ஒட்டு மொத்த பலனையும் இதன் மூலம் பெற்று வருகின்றது என்றார்.
நன்றி :Farsnews

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...