Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 04, 2013

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு

டெல்லி: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத், தேர்தல் ஆணையர்கள் பிரம்மா, நசீம் சைதி ஆகியோர் இன்று காலை டெல்லியில் கூடி தேர்தல் தேதிகளை முடிவு செய்தனர். பின்னர் மாலையில் தேர்தல் தேதிகளை சம்பத் அறிவித்தார். 90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சட்டீஸ்கரில் நவம்பர் 11, 19 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது

230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 25ம் தேதியும், 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் டிசம்பர் 1ம் தேதியும் தேர்தல் நடைபெறும். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. 40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்திலும் டிசம்பர் 4ம் தேதியே தேர்தல் நடக்கவுள்ளது. இந்த 4 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 5 மாநிலங்களிலும் டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும். அன்றே தேர்தல் முடிவுகள் வெளியாகும். இந்த 5 மாநிலங்களிலும் 11 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 5 மாநிலங்களிலும் மொத்தம் 1,30,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. நக்ஸல்கள் ஆதிக்கம் மிகுந்த மாநிலமான சட்டீஸ்கரில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தல்கள் அடுத்தாண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையவுள்ளன.

மிசோரம் தவிர்த்த மற்ற 5 மாநிலங்களிலும் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி மோதல் நடக்கவுள்ளது. இதில் ராஜஸ்தான், டெல்லி, மிசோரம் மாநிலங்களில் காங்கிரசும், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கரில் பாஜகவும் ஆட்சியில் உள்ளன. தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்னதாக கருத்துக் கணிப்புகள் வெளியிடுவது தடை செய்யப்படும்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...