Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 04, 2013

அக்.7 முதல் பயணிகள் ரயில் கட்டணம் உயர்கிறது: 3% அதிகரிக்க வாய்ப்பு

டெல்லி: அக்டோபர் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எரிபொருள் விலை உயர்வு, பிற செலவின நிலவரத்துக்கு ஏற்ப 6 மாதத்துக்கு ஒரு முறை பயணிகள் ரயில் கட்டணமும், சரக்கு கட்டணமும் உயர்த்த திட்டம் வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டும் கடந்த 1 ஆம் தேதி முதல் 15 சதவீத சரக்கு கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதனிடையே, டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, ''பட்ஜெட்டில் எரிபொருள் விலை நிலவரத்துக்கு ஏற்ப ரயில் கட்டணத்தை மாற்றி அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி பயணிகள் கட்டணத்தை கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது தொடர்பான கோப்பு என்னிடம் வந்துள்ளது. நான் அதை பரிசீலித்துக்கொண்டிருக்கிறேன். இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்'' என்றார். இந்நிலையில் பயணிகள் ரயில் கட்டணத்தை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த கட்டண உயர்வு வருகிற 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என்றும் ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சரக்கு கட்டண உயர்வு டீசல் விலை உயர்வால், பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ள ரயில்வே துறை ரயில்களின் சரக்கு கட்டணத்தை மேலும் கூடுதலாக 15 சதவிகிதம் வரை அக்டோபர் 1ம் தேதி முதல் உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 7ம் தேதி முதல் பயணிகள் கட்டணம் உயரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...