பந்தர் செரி பகவன்: புருனை அரசு, நாட்டில் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க வேண்டி தண்டனைகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது.
எண்ணெய் வளம் மிகுந்த புருனை 1984ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
ஹசனல் போல்கையா சுல்தானால் ஆட்சி செய்யப்படும் புருனேயின் மக்கள் தொகையில் 70% முஸ்லிம்களாகும். முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்தாலும், இந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை இந்நிலையில்தென்கிழக்கு ஆசியாவில் தீவு தேசமான புரூனேயில் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் அமல் படுத்தப்படும் என்று ஆட்சியாளர் சுல்தான் ஹஸனுல் புல்கியா அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் திருட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளியின் கரம் வெட்டப்படும், விபச்சாரம் செய்தவர்கள் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள் என்று சுல்தான் புல்கியா தெரிவித்துள்ளார்.
ஷரீஆ சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவித்த சுல்தான் புல்கியா, புரூனேயில் இனி முதல் போதைப் பொருட்கள் உபயோகம் மற்றும் கருக்கொலை தடை செய்யப்பட்டதாக உத்தரவிட்டுள்ளார். ஆறு மாதத்திற்குள் ஷரீஆ சட்டம் பூரணமாக அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ள சுல்தான், புரூனேயின் மகத்தான வரலாற்றின் ஒரு பகுதியாக ஷரீஆவை அமல்படுத்துவதாக தெரிவித்தார். புருனேயில் பிரிட்டீஷ் மாதிரி நீதிமன்றம் உள்ளது. இது குடும்ப தகராறு
மற்றும் திருமணம் போன்ற வழக்குகளில் மட்டுமே தலையிடும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...