தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிக செவிட்டு தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டு தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையில் அதிக சத்தமுள்ள பட்டாசுகளைத் தவிர்த்து, விபத்தில்லா தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட, குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைகளை அளித்துள்ளது. அதன்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டாம். பட்டாசுகளை திறந்த வெளியில் வெடிக்கவும்.
குடிசைகள் மற்றும் எளிதில் தீப்பற்றும்
பொருட்கள் இருக்கும் இடங்களில் வாணவெடி மற்றும் ராக்கெட் வெடிகளை வெடிப்பதை தவிர்க்கவும். குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டாம். . மருத்துவமனை, பள்ளி, கோர்ட் அமைந்துள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மீறுவோர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அபராதம் விதிக்கப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...