Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 01, 2013

ஸ்தம்பித்தது அமெரிக்க அரசு: பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாததால் அரசு வேலைகள் நிறுத்தம்,தற்காலிக ஆட்குறைப்பு

வாஷிங்டன் (யு.எஸ்).: குடியரசுக் கட்சியின் தொடர் பிடிவாதம காரணமாக பட்ஜெட் ஒதுக்கீடு நடக்காததால் அமெரிக்க அரசே ஸ்தம்பித்துள்ளது. அரசு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்திய அரசியல்வாதிகளுக்கு எந்த வகையிலும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பது போல், அமெரிக்க எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களின் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். இதனால் இங்கு நாடாளுமன்றம் முடங்கியது போல, அமெரிக்க அரசாங்கமும் முடங்கிப் போயுள்ளது. சுமார் 3.3 மில்லியன் அரசு ஊழியர்கள் தற்காலிகமாக வேலை இழந்துள்ளார்கள். மீண்டும் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும் வரை இவர்களுக்கு சம்பளம் கிடையாது. கட்டாய விடுப்பில் இருக்க வேண்டும். ராணுவத்தினர் உட்பட அத்தியாவசிய பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு, பட்ஜெட் ஒதுக்கீட்டுக்கு பிறகுதான் சம்பளம் கிடைக்கும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...