Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 27, 2013

காட்டுமன்னார்குடி கடை தெருக்களில் திருட்டுகளை தடுக்க கண்காணிப்பு கேமிரா!!

காட்டுமன்னார் குடியில் கடை தெருக்களில் திருட்டை தடுக்க போலீசார் கண்காணிப்பு கேமிராவை பொருத்தி உள்ளனர்.

தீபாவளி பண்டிகையை யொட்டி காட்டுமன்னார் குடி பகுதியை சுற்றி உள்ள பல்வேறு கிராமத்தினர் காட்டுமன்னார் குடிக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இதையடுத்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள், திருட்டு சம்பவங்களில் ஈடுபடலாம் என கருதி காட்டுமன்னார் குடி பஸ் நிலையம், முக்கிய கடை வீதியான கச்சேரி தெரு, பழைய போலீஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு கேமிராவை பொருத்தி உள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில் சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி காட்டுமன்னார்குடி வியாபாரிகள், வர்த்தக சங்க பிரமுகர்கள், மற்றும் ரோட்டரி, அரிமா சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலின்றி பொருட்களை வாங்கி செல்லும் வகையில் வியாபாரிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் தங்களது வாகனங்களை பழைய போலீஸ் நிலையம் பகுதியிலும் மற்றும் தாசில்தார் அலுவலகம் அருகிலும் நிறுத்த
வேண்டும் என்று கேட்டு கொண்டார். இது தவிர திருட்டு சம்பவங்களை தடுக்க ஆங்காங்கே போலீசாரை நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சாதாரண உடையிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...