பொருளாதாரத்தில்
பின்தங்கியுள்ள நன்றாக படிக்கும் இசுலாமிய மாணவர்களிடமிருந்து கல்வி உதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனும் அறிவிப்பை இசுலாமிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.
இந்த கல்வி ஆண்டில் (2012-2013) முதல் வருடம் சேரும் கீழ்கண்ட பாடப்பிரிவு மாணவர்கள் இந்த கல்வி உதவிக்காக விண்ணப்பிக்கலாம்
மருத்துவம்,பொறியியல் ( அனைத்து பிரிவுகளும்),ஹோமியோபதி, யுனானி,ஆயுர்வேதம், விவசாயம், மீன்வளம்,காடு வளர்ப்பு, உணவு தொழிநுட்பம்,மைக்ரோ பயோலஜி, பையோ டெக்னோலஜி,BBA, BL, LLB
இந்த உதவியை பெறுவதற்கு மாணவர்கள் கீழ்கண்ட விசயங்களை பூர்த்தி செய்ய வேண்டும்
1.ஆங்கிலம்,இயற்பியல், வேதியியல்,உயிரியல்/கணிதம் ஆகிய நான்கு பாடங்களையும் சேர்த்து குறைந்தபட்சம் 70% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
2.BBA, MBA (4 வருடம்) ,சட்டம் படிக்க உள்ள மாணவர்கள் தங்களுடைய (10 +2)ஆங்கிலம் மற்றும் எலக்டிவ் பாடங்களில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
3.24 வயதுக்குள் இருக்க வேண்டும் வேறு எந்த கல்வி உதவியும் பெறக்கூடாது
4.மாணவர்களின் பெற்றோர்கள் வறுமையின் காரணத்தால் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாதவர்களாக இருக்க வேண்டும், Payment seat எடுக்கும் மாணவர்கள் இந்த கல்வி கடனுக்காக விண்ணப்பிக்க கூடாது
5. இந்த உதவியை பெறும் மாணவர்கள் இந்த நாட்டிற்காகவும் தனத சமுதாயத்திற்காகவும் கல்வி உதவியை பெற்ற வருட எண்ணிக்கைகாகவது குறைந்த பட்சம் சேவை செய்வேன் என்ற உறுதி மொழியை தரவேண்டும்
இந்த கல்வி உதவியானது வட்டி இல்லாத கடனாக வழங்கப்படுகிறது , தங்கள் படிப்பை முடித்த பிறகு மாணவர்கள் இந்த கல்வி உதவி பணத்தை தவணை முறையில் தந்து விட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் IDB யின் இந்திய துணை நிறுவனம் SIT யை வரும் ஜூலை 31க்குள் அடைய வேண்டும்
பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை அனுப்ப வேண்டிய முகவரி,
THE STUDENTS ISLAMIC TRUST
E-3, Abul Fazl Enclave,
Jamia Nagar, New Delhi- 110 025
INDIA.
Phone Off.: 91 11 26957004; 26941354;26941028
விண்ணப்பஙகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய வலைத்தள முகவரி
For Information in English. Please visit below website
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...