Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 04, 2012

பிச்சாவரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

சிதம்பரம்: தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தோடு வெயிலும் போட்டுத் தாக்குகிறது. இதனால் மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதுபோல் சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்திற்கும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சிதம்பரத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிச்சாவரம் வனப் பகுதியின் கடற்கரை நீளம் 6 கிலோ மீட்டர் ஆகும்.

 மேற்கே உப்பனாறும், தெற்கே கீழ திருக்கழிபாளையும், வடக்கே சுரபுன்னை காடுகளும் எல்லைகளாக உள்ளன. இங்கு சதுப்பு நிலக்காடுகள் மூவாயிரம் ஏக்கர் பரப் பளவில் உள்ளது. இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான சுரபுன்னைச் செடிகளும் உள்ளன. கடலோரத்தில் உப்பனாற்றிலுள்ள காடுகளில் நாலாயிரத்து நானூறு கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளில் வனத்துறையினர் பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். இந்தியாவில் மேற்குவங்கம் மற்றும் தமிழகத்திலுள்ள பிச்சாவரத்தில் மட்டுமே இந்த சுரபுன்னை காடுகள் உள்ளன. இந்த சுரபுன்னை இலைகள் மருத்துவ குணம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழகம் மட்டு மின்றி பிற மாநிலத்தில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

 இங்குள்ள வெளிநாட்டு பறவைகளை படகுகளில் சென்று சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். மேலும் பிச்சாவரம் அருகிலுள்ள எம்ஜிஆர் திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய எழில்மிகு தீவுகளுக்கும் படகுகளில் சென்று மக்கள் பொழுது கழிக்கின்றனர். படகு குழாமில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு ரூ. 40
வீதமும், துடுப்பு படகில் 5 பேர் பயணம் செய்ய ரூ. 200 கட்டணமும், மோட்டார் படகில் இரண்டு மணிநேரத்திற்கு 8 பேர் பயணம் ரூ. 2100ம் வசூலிக்கப்படுகிறது. கண்ணுக்கு குளிர்ச்சியாக மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை காடு களை சுற்றி பார்க்க பிச்சாவரத்துக்கு சுற்றுலா பயணி கள் குவிந்து வருகின்றனர்.

source:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...